சுபேதார் சுப்பிரமணியம்:  
கல்கி

பிரிட்டிஷ் அரசின் ஜார்ஜ் கிராஸ் விருது பெற்ற ஒரே இந்திய சிப்பாய்..!

கோவீ.ராஜேந்திரன்

ந்தியாவை ஆண்ட  பிரிட்டிஷ் படையில்  ராணுவ வீரர்களாக பணியாற்றிய பல இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு இன்னமும் வெளியே தெரியாமல் இருக்கிறது. இப்படி ஆவணப்படுத்தப்படாத ஒரு வீரத் தமிழர்தான் சுபேதார் சுப்பிரமணியம். இவர் ஒருவர்தான் ஜார்ஜ் கிராஸ் விருது பெற்ற ஒரே இந்தியர். ஜார்ஜ் கிராஸ் விருது என்பது துணிச்சலுக்கான பிரிட்டிஷ் விருது. இது நம் அசோக சக்ரா விருதுக்கு சமமானது.

சுபேதார் சுப்பிரமணியம்: 1912-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் கீழ்வேடிவாக்கம் கிராமத்தில் பிறந்தவர்  அவரது தந்தை அப்போது பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். தந்தையை தொடர்ந்து மகன் சுப்பிரமணியமும் ராணுவத்தில் இணைந்தார். அவர் சேர்ந்தது விக்டோரியா மகாராணியின் சொந்த படைப்பிரிவு மெட்ராஸ் சாப்பர்ஸ் மற்றும் மைனர்ஸ் (Madras Sappers and Miners)  ராணுவத்தினருக்கான பாலங்கள் கட்டுதல், கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அகற்றுதல் என்பது இதன் பிரதான பணி

இப்படைப் பிரிவில் இணைந்த சுபேதார் சுப்பிரமணியம் 2-வது உலகப் போர் காலத்தில் இத்தாலி போர்முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 32. மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்தார்.

இரண்டாம் உலகப் போரில், 1943-ம் ஆண்டு டிசம்பரில் இத்தாலிய போர் முனையில் இணைந்தார் சுப்பிரமணியம். அங்கிருந்து 1944-ம் ஆண்டு நிகழ்ந்த உலகின் மிக கோரமான யுத்தங்களில் ஒன்றான மான்டே காசினோ  (Monte Casino) போரில் ஈடுபடுத்தப்பட்டார் சுப்பிரமணியம். ராஜ்புத், கூர்கா படைகள் Monte Casino மீது தாக்குதல் நடத்த, Madras Sappers படையணி அவர்களுக்கு உதவியாக களத்தில் நின்றது. காசினோவின் மலை மடாலயத்தின் மீதான தாக்குதலுக்கு பிறகு, கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.  11 ஃபீல்ட் பார்க் நிறுவனம்

இதன் தலைமையேற்று சென்றார் சுப்பிரமணியம். அவருக்கு முன்பாக பாதையை சுத்தப்படுத்திச்சென்ற வீரர் ஒருவர். அப்போது தெரியாமல் கண்ணி வெடி ஒன்றை மிதித்து அதை முடுக்கிவிடுகிறார். இதனை தனது நுட்பமான அனுபவத்தின் மூலம் கண்டு கொண்ட சுப்பிரமணியம். அது நாலு நிமிடங்களில் வெடித்துவிடும் என்பதை ஊகித்து விடுகிறார். அந்த கண்ணிவெடி வெடித்தால் ஒட்டுமொத்த சுரங்கமும் வெடித்து சிதறி விடும். அதோடு தன்னுடன் வந்த 9 பேரும் இறந்து விடுவர்.

கண்ணிவெடி வெடித்து சிதறும்போது தாமும் தூக்கி வீசப்பட்டு வெடித்து சிதறுவோம் என அறிந்தே இருந்தார் சுபேதார் சுப்பிரமணியம். ஆனால் சக ராணுவ வீரர்களைக் காப்பாற்ற தன்னையே அர்ப்பணிக்க அப்படியே கண்ணிவெடி மீது படுத்தார் சுபேதார் சுப்பிரமணியம். சில நொடிகளில் கண்ணிவெடி வெடித்து சிதற வானில் சுபேதார் சுப்பிரமணியமும் தூக்கி வீசப்பட்டு தரையில் வீழ்ந்து கிடந்தார் சக வீரர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பார்க்கும் சில நொடிகள் வரை உயிரோடுதான் இருந்தார் சுப்பிரமணியம் பின்னர் வீரமரணம் அடைந்தார்.

சுபேதார் சுப்பிரமணியனின்  இந்த வீரதீர செயலுக்காக அவருக்கு ஜார்ஜ் கிராஸ் விருது வழங்க பிரிட்டிஷ் அரசு  முடிவு செய்தது. இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு 1944 ஜூன் 30 கெஜட்டில் வெளியிடப்பட்டது. ஆனால் அது லண்டனில் காணமல் போய் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டது பின்னர் அது பிரத்யேக விழா ஒன்றில் அப்போதைய வைஸ்ராய்  லார்டு  ஆர்சிபால்டு வாமவெல்    இடமிருந்து பிரிட்டிஷ் அரசின் மதிப்பு மிக்க ஜார்ஜ் கிராஸ்  (இறப்புக்கு பிந்தைய) விருதை அவரது 27 வயது மனைவி சண்பகம்பாள் பெற்றுக் கொண்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியில் போரில் வீழ்ந்து அங்கு தகனம் செய்யப்பட்ட இந்திய அதிகாரிகள் மற்றும் வீரர்களின் நினைவாக இத்தாலியில் சாங்ரோ ​​நதி கரையில் தகன நினைவகம் அமைக்கப்பட்டது, மேலும் அந்த போரில் இறந்த நேச நாடுகளை நினைவுகூரும் வண்ணம் லண்டனில் உள்ள அரசியலமைப்பு மலையில் நினைவு வாயில்களை அமைத்தனர். இந்த இரு இடங்களிலும் . சுப்ரமணியத்தின் பெயரை பொறித்து அவரை பெருமைப்படுத்தினர்.

Goblin Shark: The 'Living Fossil'

சின்னத்திரையில் அறிமுகமாகவிருக்கும் கௌதமி… எந்த சீரியலில் தெரியும்?

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

SCROLL FOR NEXT