மங்கையர் மலர்

104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி.. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்!

எல்.ரேணுகாதேவி

சாதிக்க நினைப்பவர்களுக்கு வயது எப்போதும் ஒரு தடையில்லை என கூறப்படுவதுண்டு. இந்த கூற்றை மெய்பிக்கும் விதாமாக அமெரிக்காவைச் சேர்ந்த 104 வயது மூதாட்டியான டோரதி ஹாஃப்னர் 4 ஆயிரத்தி 100 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து ஸ்கைடைவிங் சாகசம் மூலம் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

சிகாகோவில் முதலாம் உலகப் போர் முடிவடைந்த காலகட்டமாக 1918ம் ஆண்டு பிறந்தவர் டோரதி ஹாஃப்னர். இவருக்கு வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதியோடு 105வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். ஆனால், அதற்கு முன்பு இந்த பிரபஞ்சத்தில் நூற்றாண்டுகளை கடந்து வாழுவதை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றவேண்டும் என முடிவெடுத்தார் டோரதி. இதனையடுத்து உலகில் மிக அதிக வயதில் ஸ்கைடைவிங் செய்த நபர் என்ற சாதனையை செய்ய முடிவெடுத்தார்.

இதனையடுத்து இல்லினாய்ஸின் ஒட்டாவாவில் உள்ள ஸ்கைடிவ் சிகாகோவில் ஒரு விமானத்தில் ஸ்கைடைவிங் குழுவினருடன் பறந்துச்சென்றார். அப்போது, பயிற்றுவிப்பாளர் உதவியுடன் 4 ஆயிரத்தி 100 மீட்டர் உயரத்தில் இருந்து பாராசூட்டில் ஸ்கை டைவ்விங் சாதனையை அவர் கடந்த 1ம் தேதி நிகழ்த்தினார். ஸ்கைடைவ் உதவியாளருடன் குதித்த டோரதி சுமார் ஏழு நிமிடங்கள் வானில் பறந்தபடியே பூமியில் வந்திறங்கினார்.

டோரதி ஹாஃப்னர் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. டோரதி ஹாஃப்னர் தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் கைதடி உதவியுடன்தான் நடமாடி வருகிறார். ஆனால் வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்கவேண்டும் என்ற அவரின் லட்சியம் தற்போது ஸ்கைடைவிங் செய்ததன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுதந்திரமாக இருப்பதற்காக திருமணம் செய்துக்கொள்ளாத டோரதி ஹாஃப்னர், தன்னுடைய 100வது வயதில் இதேபோல் ஸ்கைடைவிங் செய்ய முயற்சி மேற்கொண்டார். ஆனால், அப்போது விமானத்தில் இருந்து குதிக்க அவர் பயப்பட்டதாகவும், இந்த முறை தைரியத்துடன் தாமாக குதிக்க முற்பட்டதாகவும் தரையிறங்கிய பின் அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இங்கேகார்ட் தன்னுடைய 103 வயதில் ஸ்கைடைவிங் செய்த மிக வயதான நபர் என்ற உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், தற்போது அந்த சாதனையை மூதாட்டியான டோரதி ஹாஃப்னர் முறியடித்துள்ளார்.

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சந்தோஷமாக வாழ்வோம்!

SCROLL FOR NEXT