மங்கையர் மலர்

ஆடியில் எந்த அமாவாசையில் திதி தரலாம்! அர்ச்சகர் விளக்கம்!

சேலம் சுபா

டி பிறக்கப் போகிறது. தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு அது ஆன்மிகம் என்றாலும் அறிவியல் என்றாலும். ஆனால் மற்ற எந்த மாதங்களை விடவும் ஆடி மாதத்திற்கு தனி சிறப்புகள் உண்டு. ஆடியை பீடை மாதம் எனக் கூறுவது தவறான கருத்து. பீட மாதம் என்பதே காலப்போக்கில் பீடை என்று திரிந்திருக்கலாம். அதாவது மனமெனும் பீடத்தில் இறை சிந்தனையை நிறுத்தி நன்மை பெறும் மாதம் என்பதே காலப்போக்கில் திரிந்துள்ளது என்கின்றனர் பெரியோர்கள். ஆம் இந்த மாதத்தில்தான் அம்மன் பண்டிகைகளும் குலதெய்வ பூஜைகளும் நடைபெறும். ஆன்மீகத்தை அடிப்படையாக்கி சிந்தனையை ஒருமுகப்படுத்தப் பழக்கி ஒற்றுமையை விதைத்து உள்ளனர் நம் முன்னோர்கள்.

இதே ஆடி அமாவாசையும் மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளை விட பெரும் சிறப்பை பெறுகிறது. ஏனெனில் ஆடி அமாவாசை நமக்கு வழிகாட்டியான மறைந்த முன்னோர்களுக்கு செய்யும் நன்றிக்கடனான பித்ரு பூஜை செய்ய ஏற்றது என்பது ஐதீகம். இந்த நாளில் செய்யும் பித்ரு கடமைகள் முன்னோர்களுக்கு வருடம் முழுவதும் செய்யும் பூஜைகளுக்கு ஒப்பானது. ஆடியிலிருந்தே தட்சணாயன காலம் துவங்குகிறது என்பதால் ஆடி முதல் மார்கழி வரை உள்ள இக்காலத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவதும் தெய்வங்களை தரிசிப்பதும் பெரும் நன்மைகளைத்தரும்.

    ஆடி மாதம் நாளை மறுநாள் பிறக்கிறது. மாதத்தின் முதல் நாள் (ஜுலை 17ஆம் தேதி) ஒரு அமாவாசையும் அதனைத் தொடர்ந்து 31 வது நாள்( ஆகஸ்ட் 16) இன்னொரு அமாவாசையும் வருகிறது. நடப்பாண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வருவதால் எந்த அமாவாசை பித்ரு பூஜைக்கு ஏற்றது எனும் குழப்பத்தில் மக்கள் உள்ளனர். இதில் இரண்டாவதாக வரும் அமாவாசை திதி கொடுக்க உகந்தது என சேலம் அர்ச்சகர் ஒருவர் தெரிவித்து சந்தேகத்திற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

      அவர்கள் கூறியதாவது “ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை பௌர்ணமி வருவது எட்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அபூர்வ நிகழ்வாகும். இதுபோல வரும் மாதத்தை மலமாதம் என்று அழைப்பார்கள். இவ்வாறு வரும் மாதங்களில் சுபமுகூர்த்தம், வீடு கிரகப்பிரவேசம், கோவில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட  எந்தவித சுப நிகழ்ச்சியும் மக்கள் நடத்த மாட்டார்கள். இரண்டு அமாவாசை தினத்தில்  17ஆம் தேதி வரும் அமாவாசை சூன்ய திதியில் வருவதால் அது சாதாரண அமாவாசையாகும். இந்த நாளில் முன்னோருக்கு திதி கொடுத்து நீராடுவது உகந்தது அல்ல.

       எனவே ஆடி 31ஆம் தேதி வரும் அமாவாசையை விரதம் இருக்க உகந்த நாளாகும் இது பெரிய அமாவாசையாகும் பொதுமக்கள், பக்தர்கள் விரதம் இருக்கவும் முன்னோருக்கு திதி கொடுக்கவும் தர்ப்பணம் செய்யவும் இதுவே உகந்த நாளாகும். ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் தேவிபட்டினம் உள்ளிட்ட புண்ணிய தளங்களில் புனித நீராடவும் தர்ப்பணம் செய்யவும் இந்த நாள் தான் சிறந்தது “என்கின்றனர்.

      எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அபூர்வமாக வரப்போகும் ஆடி அமாவாசைகளில் முன்னோரை வணங்கி நலம் பெறுவோம்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT