மங்கையர் மலர்

மங்கையர் மலருடனான பயணம் இன்றும்… என்றும்… தொடரும்!

நித்யலக்ஷ்மி

முதன் முதலில் என் அம்மாதான் எனக்கு மங்கையர் மலரை அறிமுகம் செய்து வைத்தார். வீட்டில் என் அம்மா மாதா மாதம் மங்கையர் மலர் வாங்குவது வழக்கம். என் அம்மா வசந்தி பெயரில்தான் எனக்கு முதன் முதலில் குறுக்கெழுத்துப் போட்டியில் பரிசு கிடைத்தது. அம்மாவின் பெயரில் நான் கலந்துக் கொண்டு பரிசு பெற்றேன்.

அதுவே என்னை மேலும், மேலும் எழுதும் ஆர்வத்தைத் தூண்டியது. அடுத்து என் பெயரில் எழுத ஆரம்பித்தேன். மங்கையர் மலர் ஆண்டு விழா விவாத மேடையில் தேர்வு செய்யப்பட்டு, திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு, என்று தொடர்ந்து பல பரிசுகளைப் பெற்றிருக்கிறேன்.  

மெகா பரிசாக, 2019ல் மங்கையர் மலரில் மறக்க முடியாத பரிசு ஸ்கூட்டி கிடைத்தது. டெரகோட்டாவில் கலை வண்ணம் போட்டி. சில மாதங்களுக்கு முன்பு ரீல்ஸ் ராணி போட்டியில் 5000 பாலம் சில்க்ஸ் வவுச்சர், ரஜினி பிறந்தநாள் போட்டி, கோலப்போட்டி என்று பரிசுகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. இன்றும்... என்றும்… மங்கையர் மலருடனான எனது பயணம் தொடரும்.

அருகி வரும் அரியக் கலை தெருக்கூத்து!

லென்டில்ஸ் அன்ட் லெக்யூம்ஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

இயற்கையை ரசிக்க என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

இணையத்தில் உள்ள AI Web Browsers என்னென்ன தெரியுமா? அவற்றின் பலன்களைப் பார்ப்போமா?

மின்னணு வாக்குப்பதிவு vs வாக்குச்சீட்டு: தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

SCROLL FOR NEXT