மங்கையர் மலர்

நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க...

மங்கையர் மலர்

நிறைய பேருக்கு அல்சர் வயிற்றுக் கோளாறு காஸ் டிரபிள் ஏப்பம் என பலவிதமாக வயிறு சம்பந்தமான கோளாறு காரணம் பலவிதம்.

பொதுவாக வயிறு சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்க, சமையலறையைச் சுத்தமாக ஈ, கொசு, தண்ணீர் கொசு இல்லாமல் பார்த்துக் கொள்ளணும். கண்ட கண்ட கடைகளில் வாங்கிச் சாப்பிடுவதை தவிர்க்கலாம். வீட்டில் சுட்ட எண்ணெயில் திரும்பத் திரும்ப சமைப்பது கூடாது.

நேற்று செய்த உணவு வகைகளை உங்க உணவு மேசைகளில் சேர்க்காதீர்கள். அன்று செய்த உணவு சரியான அளவு சமைத்து அன்றே சாப்பிட்டுவிடுங்கள். திரும்பத் திரும்பச் சூடுபடுத்தினால் சத்தும் இருக்காது.

முடிந்த மட்டில் செம்பு, மண் பாண்டங்கள் உபயோகிக்கவும். செம்பு உடம்பிற்குச் சத்து, மண் பாண்டம் குளுமை உணவும் சீக்கிரம் கெடாது. அலுமினியம் உடலுக்குத் தீங்கு என்று டாக்டர்களே இன்று கூறுகிறார்கள். நம்முடைய பலர் வீட்டில் எண்ணெய் சட்டி என்றாலே அலுமினியம் எண்ணெய் சட்டிதான். இரும்புச் சட்டிக்கு கேஸ் அதிகம் செலவாகும் என்பார்கள். உடல் நலத்திற்கு ஸ்டவ்வில் செய்யலாம். சிக்கனம் பார்க்கலாமா?

எண்ணெய் நம்மவர்கள் சீதோஜ்ணத்திற்கு நம்மவர்களின் உடலுக்கு எள் எண்ணெயைத்தான் அந்தக் காலத்தில் உபயோகித்தார்கள். எள் எண்ணெய், நல்லெண்ணெய் நம் உடல் நலத்திற்கு ரொம்ப நல்லது. ஆதலால் நல்லெண்ணெயே வறுக்க, வதக்க குழம்பு, சாம்பார் தாளிக்க உபயோகிக்கலாம்.

கடலை பருப்பு அதிக வாய்வு. பொதுவாக பருப்பு வகைகளை சமைக்கும்போது சாம்பார், கூட்டு கார வகைக்கு என்றால் அதில் பெருங்காயம், பூண்டு சேர்க்கும்போது பருப்பில் உள்ள வாய்வு அகலும். காஸ் டிரபிள் உள்ளவர்கள் பெருங்காயம், பூண்டு அதிகம் சேர்க்க வேண்டும். இனிப்பு வகைகளில் ஏலக்காய் சேர்க்க செரிமானத் தன்மை அதிகரிக்கும்.

பச்சை கொத்துமல்லி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான நோய்கள் குறையும். இஞ்சி செரிமான சக்தியை அதிகரிக்கும். மழை பனி காலம் என்றால் இஞ்சி சேர்க்க வயிறு, சளி, ஜுரம் எல்லாவற்றிற்கும் நல்லது. ஆனால் மூலம், அல்சர் உள்ளவர்கள் இஞ்சியை உணவில் சேர்க்கக்கூடாது.

முடிந்த மட்டில் பருப்பு வகைகளை அதிகமாக சேர்க்காதீர்கள். பருப்புகளை வேக வைத்ததைத் தரலாம். வேக வைக்காமல் அடை போன்றவை அதிகமாக சேர்க்கக் கூடாது.

வற்றல், அப்பளம், வடை, பேல்பூரி, பூரி, பரோட்டா போன்ற அயிட்டத்தை அடிக்கடி சாப்பிடாமல் ரொம்ப அளவோடு சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள் குறையும்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT