மங்கையர் மலர்

தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம்! 7 நன்மைகள் என்னவென்று தெரியுமா?

பொ.பாலாஜிகணேஷ்

சின்ன வெங்காயம் இரத்ததில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது அதன் நன்மைகள் இன்னும் அதிகமாக கிடைக்கிறது. இதனால் இரத்ததில் உள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றி சுத்திகரிக்கச் செய்கிறது.

பொதுவாகவே சமையலில் சின்ன வெங்காயம் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவ குறிப்புகள் உண்டு. ஊட்டச்சத்து நிபுணர்களும் சின்ன வெங்காயம் சேர்க்க பரிந்துரைப்பார்கள். அந்த வகையில் சின்ன வெங்காயத்தை ல் ஊற வைத்து சாப்பிட்டால் இன்னும் அதன் நன்மைகளை அதிகமாக பெறலாம் என்று கூறப்படுகிறது. அப்படி என்னென்ன நன்மைகளை பெற முடியும் என்று பார்க்கலாம்.

இரத்தத்தை சுத்திகரிக்கும் : சின்ன வெங்காயம் இரத்ததில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது அதன் நன்மைகள் இன்னும் அதிகமாக கிடைக்கிறது. இதனால் இரத்ததில் உள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றி சுத்திகரிக்கச் செய்கிறது.

செரிமானத்தை தூண்டும் : சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது உடலின் மெட்டாபாலிசம் அதிகரிக்கிறது. இதனால் செரிமான மண்டலத்தையும் ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறது. மேலும் தேன் , சின்ன வெங்காயம் இரண்டிலும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் செரிமான அமைப்பிற்கு கூடுதல் பலம்.

நச்சு நீக்கி : காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் எளிதில் வெளியேற்றப்படுகிறது.

தூக்கமின்மை குறைபாடு நீங்கும் : தினமும் நீங்கள் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறீர்கள் எனில் சின்ன வெங்காயம் உங்களுக்கு கைக்கொடுக்கும். தினம் ஒன்று சாப்பிட்டு பாருங்கள். பலனை நீங்களே உணர்வீர்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : நோய் எதிர்ப்பு சக்திதான் உடலுக்கு எந்தவித நோயும் வராமல் தற்காத்துக்கொள்ள உதவுகிறது. எனவே அதை எப்போதும் பலவீனமடையாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

நெஞ்சு சளியை போக்க உதவும் : எப்போதுமே நெஞ்சு சளியை சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அது நுரையீரலுக்கு பாதிப்பை உண்டாக்கும். அதை எப்படி வெளியேற்றுவது என யோசித்தால் இந்த தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உங்களுக்கு உதவலாம்.

தொப்பையை குறைக்க உதவும் : உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குவதிலும் சின்ன வெங்காயம் சிறந்தது. அப்படியெனில் தொப்பையை குறைப்பதற்கு சின்ன வெங்காயம் உதவியாக இருக்கும்.

சின்ன வெங்காயத்தை எப்படி தேனில் ஊற வைப்பது : சின்ன வெங்காயங்களை தோல் உறித்து அதை ஒரு டப்பாவில் போட்டு மூழ்கும் அளவிற்கு தேன் ஊற்றி இரண்டு நாட்கள் அப்படியே வைக்கவும். பின் அதை தேனுடன் ஒரு ஸ்பூன் எடுத்து காலையில் சாப்பிட்டு வரலாம்.

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

SCROLL FOR NEXT