மங்கையர் மலர்

பாதயாத்திரை செல்லும் போது கவனிக்க வேண்டியவை.

மகாலட்சுமி சுப்பிரமணியன்

ந்த சீசனில் சபரிமலை, பழனி, திருவண்ணாமலை என மலை ஏறும் பக்தர்கள் அதிகம். எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பயணம் மேற்கொள்பவர்கள் தங்கள் உடல் நிலையை கட்டாயம் பரிசோதனை செய்து கொண்டு பயணம் மேற்கொள்ள வேண்டும். தீடீரென மலை ஏறும்போது தசைப்பிடிப்பு, நெஞ்சில் வலி போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிவரும்.

நீண்ட நடைபயணம் மேற்கொள்பவர்கள் தசைப் பிடிப்பு, மூட்டு வலியால் அவதிப்படுவார்கள். நுரையீரல் சம்பந்தமான நோய்களும், வீசிங் வர வாய்ப்புள்ளது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மதிய நேரங்களில் நடக்க சன்ஸ்ட்ரோக் போன்ற பிரச்னைகளால் கஷ்டப்படுவர்.

பொருட்களை நீண்ட நேரம் தோளில் சுமப்பதால் முதுகு வலி, தோள்பட்டை வலி வரக்கூடும். இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் அனுமதித்தால் மட்டுமே நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும். பாதயாத்திரை செல்ல இருப்போர் மாலை போட்டதிலிருந்து தினமும் சில கி.மீ. நடந்து பழக வேண்டும். மூச்சுத்திணறல், நடக்க சிரமம் எனில் டாக்டரை கலந்தாலோசிக்க வேண்டும்.

சைப்பிடிப்பு, தசைவலிப் பிரச்னைக்கு ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்க வலி குறையும். சிறிய ரத்த காயங்களுக்கு ஐஸ் ஒத்தடம் வேண்டாம். இரண்டு, மூன்று மணி நேரம் நடந்தால் அரைமணி நேரத்திற்கு ரெஸ்ட் எடுத்துவிட்டு பின் செல்லலாம்.

காலையில் நடக்க ஆரம்பிப்பதற்கு முன்பும், நடந்து முடிந்த பின்பும் மெதுவாக குதித்தல், தோள்பட்டையை சுற்றுதல், முழங்கை, முழங்காலை நீட்டி மடக்க ரிலாக்ஸாக இருக்கும்.

ர்க்கரை நோயாளிகள் காலில் காயம் ஏற்படாத வண்ணம் கவனமாக நடக்க வேண்டும்.

மூச்சுப் பயிற்சியை தவறாமல் செய்ய வேண்டும்.

தொடர்ச்சியாக நடக்கும் போது காலில் கொப்புளம் வராமல் இருக்க துணி அல்லது சாக்ஸ் அணிந்து நடக்கலாம். உச்சி வெயிலில் நடக்காமல் இருந்தால் சன் ஸ்ட்ரோக், மயக்கம் போன்றவைகளிலிருந்து தப்பிக்கலாம்.

ரவில் வீசிங் பிரச்னை ஏற்பட்டால் காலை நேரத்தில் நடக்கலாம்.

லி உள்ள இடங்களில் வலி நிவாரணிகளை சூடு வர தேய்க்க வலி அதிகமாகும். மிதமாக தடவ வேண்டும்.

சுளுக்கு ஏற்பட்டால் தானாக சுயமருத்துவம் செய்யாமல் அருகில் உள்ள டாக்டரைப் பார்த்து ட்ரீட்மென்ட் எடுத்து அவர் ஆலோசனைப்படி பயணத்தைத் தொடரலாம்.

மிக முக்கியம் தண்ணீர். எப்போதும் நல்ல குடிநீரையே பருகிட வயிற்று பிரச்னைகள் வராது பார்த்துக் கொள்ளலாம்.

கைவசம் சால்வை, மப்ளர், கையுறை முகக் கவசம் அணிய மழையோ, குளிரோ அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாது. (முடிந்தால் ரெயின்கோட் உடன் எடுத்துச் செல்லலாம்.)

ரெகுலராக எடுக்கும் மருந்துகளை கண்டிப்பாக கைவசம் எடுத்துச் செல்ல வேண்டும்.

மொத்தத்தில் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் கவனமாக இருக்க ஆரோக்யம் பாதிக்காது நடைபயணம் மேற்கொள்ள பயணம் இனிதாகும்.

கோடைக்காலத்திற்கு ஏற்ற பெண்களுக்கான ஹேர்கட் என்னென்ன தெரிஞ்சிக்கலாம் வாங்க!

ஊட்டியையே தூக்கி சாப்பிடும் குளிர்ந்த காற்று வீசும் ராமக்கல்மேடு போவோமா வாருங்கள்!

மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

காற்றால் இயங்கும் லிஃப்ட்டுகள் அழகுக்கு அழகு, ஆற்றலுக்கு ஆற்றல்!

சாப்பிடுவதற்கும் சில விதிமுறைகள் உண்டு தெரியுமா?

SCROLL FOR NEXT