மங்கையர் மலர்

கவிதை : பறவை வீடு

பாரதி மணி

"மானுடரால்... 

எல்லையில்லா இயற்கை வளம் 

மாசுபடாத வரையிலும்...

மனிதர் வாழ... 

எண்ணிலடங்கா வனங்கள்  

வீழ்த்தப்படாத வரையிலும்...

இப் புவியில்

பச்சை மரமொன்று

மிச்சமிருக்கின்ற வரையிலும்...

எப்பொழுதும் மனிதம்

எல்லா உயிர்களையும்  

மதிக்கின்ற வரையிலும்...

துயிலெழுந்தது முதல்

துருதுரு வென்று

இரை தேடி அலைந்து...

துரிதமாகக் உண்டுகளித்து...

குதூகலமாக இணையுடன்

கூடிக் குலாவி...

பேசிச் சிரித்து மகிழ்ந்து...

பொழுது சாய இயல்பாய் கூடடைந்து

ஓய்வாக உறங்கி விட முடியும் 

இந்த பறவைகளுக்கு

ஒரு நாள் போலவே..!

சிறுகதை – பூஞ்சிறகு!

Drumstick Dosa: முருங்கைக்காய் தோசை வித் இஞ்சி சட்னி!

Paithani Saree: பைதானி கைத்தறி புடவையின் சுவாரசிய தகவல்கள்!

ஆன்மிகக் கதை - உயிர் பெற்ற பொம்மை குழந்தை!

வெற்றிக்குத் தடையாகும் அதிக சுமைகள்!

SCROLL FOR NEXT