மங்கையர் மலர்

மன்னர்களின் விருப்பமான தூயமல்லி அரிசி.

ஜி.இந்திரா

தூயமல்லி தமிழ் நாட்டின் பாரம்பரிய அரிசியாகும். பழங்காலத்தில். மன்னர்களின் விருப்பமான அரிசியாக  இது இருந்துள்ளது. வெள்ளை அரிசியை விட ஊட்டச்சத்து மிகுந்தது. மல்லிகைப்பூ போன்ற தோற்றத்தினால் தூய மல்லி என்று பெயர் பெற்றது.

பயன்கள்

1. அதிக நார்சத்து உள்ளது. உறுப்புகளின் தேய்மானத்தை சரி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.

 2. தூய மல்லியில் மக்னீசியம், புரதம், கால்சியம் இரும்பு மற்றும் துத்தநாக சத்து உள்ளது. நாம் உண்ணும் உணவை சீராக்குகிறது. எடைக் குறைக்க  உதவும் அரிசியாகும். 

3. இதில் கால்சியம் அதிகமாக உள்ளதால் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. உடல் கலோரிகளை விரைவில் எரிக்கிறது.

4. ரத்தசோகை, குடல் பிரச்னைகள், மற்றும் அறிவாற்றல் குறைபாடுகள்  உள்ளவர்களுக்கு நன்மை தரும். நரம்புத் தொடர்பான பிரச்னை வருவதைத் தடுக்கும்.

5. நார்சத்து அதிகமாக உள்ளதால்  நீரிழிவு நோயிலிருந்து  நம்மை பாதுகாக்கும். இதில் க்ளைகீமிக்ஸ் இண்டெக்ஸ் குறைவாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக உண்ணலாம்.

6. சிலருக்கு பித்தத்தினால் அடிக்கடி வாந்தி, தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இந்த அரிசி சாப்பிட அவை குணமாகும்.

7. வயதாகிவிட்டால் வெளித்தோற்றம் முதிர்ச்சி அடையும். இதை சரி செய்து இளமையான தோற்றத்தைத் தரக் கூடிய வல்லமை படைத்தது தூயமல்லி அரிசி.

வசம்பின் நன்மைகள்!

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பை பிள்ளை வளர்ப்பான் என்றும், பேர் சொல்லாதது என்றும் கூறுவர். காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. வயிறு உப்புசம் வயிறு கனமான உணர்வை போக்கக் கூடியது. எப்பேர்பட்ட கொடிய விஷத்தையும் போக்க வல்லது. இயற்கையான முறையில் நோய்களுக்கு தீர்வு பெற அரிய மருந்து.

வசம்பின் நன்மைகள்.

1. வசம்பை தூள் செய்து 2 டீஸ்பூன் எடுத்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லாவித தொற்றும் நீங்கும்.

2. விஷம் அருந்தியவர்களுக்கு வசம்பை உடனேயே 2 டீஸ்பூன் கொடுத்தால் விஷம் முழுவதும் வெளியே வந்து விடும்

3. வசம்பை சுட்டுக் கரியைத் தேனில் குழைத்து  குழந்தைகள் நாக்கில் பூசிவர பேசும் சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வாந்தி பேதி கட்டுப்படுத்தும்.

4. பாட்டி வைத்தியத்தில் முதலில் இடம் பெறுவது வசம்புதான். காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க அவர்களுக்கு பசியின்மையோ தொற்று நோயோ வராது.

5. சுடு நீர், கருவேப்பிலை, மஞ்சள்தூள் ஆகியவற்றுடன் வசம்பைக்   கலந்து  கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

6. வசம்பை மஞ்சளுடன் நீர் சிறிது தெளித்து மையாக அரைத்து தேள், பூரான் மற்றும் வண்டுக் கடிக்கு பூசி வர விஷம் முறியும். கடுப்பு முற்றிலும் நீங்கும்

7. தேங்காய் எண்ணையும், வசம்பையும் பொடி செய்து குப்பை மேனிச் சாற்றை  சேர்த்துக் காய்ச்சி  வடிகட்டி எடுத்து வைத்து அதை சிரங்கின் மேல் தடவினால்  விரைவில் சிரங்கு குணமாகும்.

8. வசம்பு மற்றும் பூண்டு அரைத்து வெல்லத்துடன் உண்டால் குடலில் உள்ள தீமை தரும் புழுக்கள் மலத்தின் வழியே வெளிப்படும்.

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

SCROLL FOR NEXT