எழுத்தாளர்கள் தனிப்பிரிவை சேர்ந்தவர்கள் என பல வருடங்களாக வாசகியாகவே இருந்த என்னை, உனக்குள்ளும் ஒரு படைப்பாளி இருக்கிறாள் என ஊக்குவித்தது மங்கையர் மலர்தான்.
முதன் முதலாக 'ஆஹா 50' க்கு (2007ல்) ஒரு குறிப்பு எழுதி, அதற்கு தடித்த மங்கையர் மலர் புத்தகத்துடன், வாழ்த்து அஞ்சல் அட்டையும் முதல் தேதியன்றே போஸ்ட்மேன் டெலிவரி செய்தபோது அடைந்த ஆனந்ததிற்கு அளவேயில்லை.
அதன் பிறகு பல பிரிவுகளில் கலந்து கொண்டு M.O., புத்தகம், ரூ.2000/=மதிப்புள்ள பாலம் சில்க்ஸ் புடவை உள்பட 4 புடவைகள் என மங்கையர் மலரிலிருந்து பல சன்மானங்கள் பெற்றதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். பல போட்டிகளில் கலந்து கொண்டதில் பல புதிய தகவல்களைஅறிந்து கொள்ள முடிந்தது. மற்றும் உறவினர்கள், நண்பர்கள் இடையே மதிப்பு உயர காரணம் என எல்லா புகழும் மங்கையர் மலருக்கே!
43வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் 'மங்கையர் மலர்' மேலும் மேலும் பல பிறந்தநாள் காண பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும்.