ஓவியம்: பிள்ளை 
மங்கையர் மலர்

சிறுகதை: மனிதம்!

பிருந்தா நடராஜன்

வாக்கிங் போய்விட்டு வரும் வழியில் கீரை விற்கும் பெண்மணியைக் கண்டதும் மனைவி கீரை வாங்கி வரச்சொன்னது நினைவுக்கு வந்தது சாம்பசிவத்திற்கு…

“ஏம்மா… இந்தக் கீரை என்ன விலை? அந்த கீரை என்ன விலை?” என்று பத்து நிமிடத்துக்கு மேல் கேட்டு கீரை கட்டை எடுத்து, “இது நல்லா இல்லை; அது நல்லா இல்லை” என்று சொல்லிவிட்டு, “சரி ஏதாவது ஒரு கீரை நல்லதா பார்த்துக் குடும்ம்மா. இங்க பாரு எதா இருந்தாலும் பத்து ரூபாய்க்கு மேல தர மாட்டேன். பார்த்து எடுத்துக் கொடு…”

“ஐயா… இங்க பாருங்க. இதெல்லாம் எங்க கிராமத்துத் தோட்டத்தில நாங்களே பயிரிட்டு விளஞ்சது. இயற்கை உரம் தவிர எதுவுமே போடல. மணத்தக்காளி கீரை வயித்துப் புண்ணுக்கு மருந்து. மலச்சிக்கலுக்குப் பசலைக்கீரை. கல்லீரலுக்கு வெந்தயக்கீரை. இரும்புச்சத்துக்கு அகத்திக்கீரை. சர்க்கரை நோய்க்கு முருங்கை கீரை. வல்லாரை கீரை மூளை வளர்ச்சி ஞாபக சக்திக்கு. பருப்பு கீரை பித்தம் போக்க. தூதுவளை கீரை சளியை நீக்க. எது தரட்டும் சொல்லுங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில பக்கத்தில் இருக்கிற பால்வாடியில படிக்கற பிள்ளைங்க வந்துடும். அவங்க எல்லாருக்கும் ஒரு கட்டு கீரை குடுத்துடுவேன்…”

“சும்மாவா?”

“பின்னே காசுக்கா குடுப்பாங்க? எங்க தோட்டத்து கீரை... ‘பாவம் பால்வாடி பசங்க. ‌தினம் ஒரு கீரை சாப்பிட கொடும்மான்னு’ என் பையனும் மருமகளும் சொல்லிட்டாங்க. அதான் இங்க காத்துகிட்டு இருக்கேன். இந்தாங்க...” என்று இரண்டு கட்டுக் கீரையைக் கொடுத்துவிட்டு, சாம்பசிவம் கொடுத்த பத்து ரூபாயை வாங்காமல், “முடிஞ்சப்போ வந்து என்கிட்ட கீரை வாங்கி ஏழை மக்களுக்கு கொடுங்க... உங்களுக்குப் புண்ணியமா போகும்” எனறு கூறிவிட்டு நடக்கலானாள் கீரை விற்கும் அப்பெண்மணி. பாடம் புகட்ட எப்போதும் ஆசிரியர் தேவை  அல்ல. இதுபோல் எத்தனையோ மனிதாபிமானம் மிக்க மனித உள்ளங்கள் இருக்கின்றன.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT