short story... 
மங்கையர் மலர்

சிறுகதை: விடாமுயற்சி!

கல்கி டெஸ்க்

-ஜெயா ஶ்ரீனிவாசன்.

ந்தப் பிரபல ஹோட்டலில், மற்ற மெடிக்கல் ரெப்களுடன் புதிதாக வந்து சேர்ந்த சாதனாவை வரவேற்றான் விக்னேஷ் சீனியர். அவனுக்கு இன்று பிறந்தநாள் அதுக்காகத்தான் இந்த லஞ்ச் பார்ட்டி.

நாம் இதுவரை ஆண்கள் மெடிகல் ரெப்பைதான் பார்த்துள்ளோம்; முதல் முதலில் ஒரு பெண் ரெப்பை வரவேற்கிறோம்.”

“இதில் நிறையச் சவால்கள் இருப்பதைத் தெரிந்தும், துணிச்சலாக இந்த வேலையை எடுத்துக்கொண்ட சாதனாவை, மீண்டும் நண்பர்கள் சார்பாக வரவேற்கிறேன்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த சாதனாவை பார்த்து,

“என்ன சாதனா இன்னிக்குச் சாயந்திரம் எந்த டாக்டரை பார்க்க போறீங்க? என்றான் விக்னேஷ்.

“இன்னிக்கு முதலில் டாக்டர் நரசிம்மனைதான் பார்க்க போறேன்; அவர் தான் என் லிஸ்டில் முதல் நபர். மற்ற டாக்டர்கள் பிறகுதான்.”

மற்ற எல்லோரும் குபீரன சிரித்தார்கள்.

“ஏன் எல்லோரும்  சிரிக்கறீங்க?”

“நீங்க இந்த வேலைக்கு வந்திருக்கக் கூடாது. ஏதோ ஆர்வம் மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமா வந்துருக்கேன்னு புரியுது.”

“ஆனா  இன்னியோடு ஒன் கதை முடிஞ்சுது எதுக்கும் நீ ஒன் கம்பனி முதலாளிக்கு ராஜினாமா லெட்டர் தயாரா வைச்சுக்கோ”. சுரேஷ் கிண்டலடித்தான்

“இது கிண்டலா, இல்லை அறிவுரையா“ புரியாமல் இருந்தாள் சாதனா.

“அனுபவம் உள்ள எங்களாலயே அவரை ஒரு தடவை கூடப் பார்க்க முடியல. ஒவ்வொரு தடவையும் பார்க்க போனா, கதவை திறக்காம திட்டு தான் வாங்கிட்டு வரோம்.”

“நீயும் அவரைப் பார்க்க முடியாது. அவர் சுபாவமே எந்த மெடிகல் ரெப் போனாலும் பார்க்கமாட்டர். கதவை திறக்கமாட்டார். வீடு அதோடு கிளினிக்“.

“ஒருவேளை திறந்தால் பெண் என்று கூடப் பார்க்காமல் உன்னைக் கடுமையான வார்த்தைகளால் திட்டுவார்.”

“அனாவசியமாக மூக்கு உடைபடப் போறே சாதனா” ஆள் ஆளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

“சரி சரி! அவங்க மூடை கெடுத்து அவளைச் சாப்பிட விட முடியாம பண்ண வேண்டாம்“.

“பேசாம அந்த டாபிக் மறந்துட்டு சாப்பிடுங்க“ என்ற விக்னேஷ் சொன்னதும்,

மற்றவர்கள் வாழை படம் பற்றியும் சில பேர் கொட்டுக்காளி படம் பற்றியும் அதில் உள்ள நிறை குறைகளைப் பற்றிப் பேசவே எல்லோரும் சாதனா விஷயத்தை மறந்தபோது,

சாதனா மட்டும் எழுந்து நின்று “டியர் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு பெண் மருந்து விற்பனை பிரதிநிதியாக இருப்பது சவால்கள் நிறைந்தது.“

“வாழ்க்கைப் பாதை மற்றும் வளர்ச்சி கொஞ்சம் கடினம்தான்”.

“முன் கூட்டிய சந்திப்புகள் மற்றும் தாமதமான அழைப்புகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், சமயத்தில் இரவு நேர அழைப்புகளும் போக வேண்டுருக்கும்”.

“ஆனால் இந்தத் தடைகள் இருந்தபோதிலும், மருத்துவப் பிரதிநிதியாக, என் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கு நான் அசைக்க முடியாத உறுதி: கொண்டுள்ளேன். நிச்சயம் ஜெயிப்பேன்”.

“என் பாஸ் கிட்ட சொல்லிட்டுதான் வந்துருக்கேன். என் லிஸ்ட் ல இருக்கிற எல்லா டாக்டர்களையும் பார்ப்பேன்; என்னால் முடியும் ஆர்டர் வாங்குவேன்“.

“நாங்க சொல்றதை சொல்லிட்டோம். அப்புறம் உன் இஷ்டம்”.

“இதை நான் சாலஞ்சாக எடுக்கிறேன். இன்னும் 40 நாட்களுக்குள் நரசிம்மன் டாக்டரை பார்த்துவிட்டு ஆர்டர் வாங்கி 41 வது  நாள் நான் ஒங்களுக்கு லஞ்ச கொடுக்கிறேன். ஓகே”.

“நல்லதுக்குக் காலமில்லை.”என்று சொல்லிக்கொண்டே அவரவர்கள் கிளம்பி சென்றார்கள்.

நண்பர்கள் சொன்ன மாதிரி நரசிம்மன் கிளினிக் cum வீடு பழமையானது. அந்தப் பழமைத் தோற்றத்தில் இருந்த வீட்டின் மாடிப்படிகளைக் கடந்து காலிங் பெல்லை அழுத்தியபோது, திறக்காமல் யார்? என்றார்.

“நான் சாதனா மெடிகல் ரெப்”!. கம்பனியின் பெயரை சொன்னாள்.

“நான் எந்த ரெப்பையும் பார்க்க விரும்புவதில்லை. நீ போகலாம்.”

மறு வாரமும் இதே பதில், கதவு திறக்கப்படவில்லை.

நான்கு வாரமும் இதே சோதனைதான். மற்ற நண்பர்கள் சொன்ன மாதிரி ஆகிவிடுமா?

அஞ்சாவது வாரம் அதிசயமாகக் கதவை திறந்தார். வெளியே வந்தவரை பார்த்தபோது நீண்ட உயரமானவர் வயது 60 இருக்கலாம்.

உள்ளே கூப்பிட்டார். மருத்துவச் சம்பந்தமான புத்தகங்கள். நிறைய இருந்தன.

“ஏன் சாதனா? இந்த முறையும் நான் திறக்கவில்லை என்றால் என்ன செய்வாய்?”

அடுத்தவாரம் மீண்டும் வருவேன் டாக்டர். இப்படிச் சொன்னதும் அவர் சிரித்து விட்டார். குடும்பம் பற்றிக்கேட்டார்

இத பாரு. நான் பிராக்டீஸ் பண்ணி ரொம்ப நாளாச்சு. கடந்த 40 வருடமா ஒரே கம்பனியில்தான் வாங்கிக் கொள்கிறேன்.

இப்போது முன்பு மாதிரி பிராக்டீஸ் பண்ணுவதில்லை. வாரத்தில் மூணு நாள்தான். நீ தேவையில்லாமல் உன் நேரத்தை வேஸ்ட் பண்ணவேண்டாம். நீ கிளம்பு.

இல்லை சார். நான் ஒவ்வொரு வாரமும் வருவேன். ஏன் என்றால், நான் என் கம்பனிக்குச் சத்தியம் செய்துள்ளேன். மிகவும் திறமை வாய்ந்த பெயர் பெற்ற டாக்டர் நரசிம்மன் அவர்களிடம் என் கம்பனி புரோடக்ட்ஸ் பற்றி விரிவாகச் சொல்லி ஆர்டர் வாங்குவேன் என்று.

அவர் கதவை மூடிவிட்டு அவளைப் போகச் சொன்னார்.

மீண்டும் அடுத்த வாரமும் போனபோது புன் முறுவலுடன்கதவை திறந்து உள்ளே வா சாதனா.

உன்னுடைய விடாமுயற்சிதான் என்னைக் கவர்ந்தது. இந்தச் சின்ன வயதில் உன் சகிப்பு தன்மையை நான் ஶ்ரீ ராமானுஜர் செய்கையுடன் ஒப்பீடுகிறேன்.

பதினெட்டு முறை திருவரங்கத்திலுருந்து தன் குரு நம்பியை தரிசிக்கப் போனபோது திருக்கோஷ்டியூர் நம்பி கதவை திறக்காமல் இருந்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் ராமானுஜர் காடுகளின்  வழியே  இதே மாதிரி தான் நடந்து வந்துள்ளார்.

பதினெட்டாவது முறை  கதவை திறந்தபோது அவர் பொறுமையை பாராட்டி, தான் அவருக்கு ஒரு மந்திரம் போதித்து அந்த மந்திரத்தை ராமானுஜர் கேட்ட பின்பு  கோபுரம் உச்சியில் இருந்து ஊர் மக்கள் அனைவருக்கும் சொன்னதால் எல்லோரும் சொர்க்கம் கிடைத்ததாம். இதில் பார்க்க வேண்டிய விஷயம் ராமானுஜரின் பொறுமை விடாமுயற்சி. காடுகளிலும் மேடுகளிலும் திருவரங்கதிலுருந்து திருகோஷ்ட்டியூர் வந்தது. அவரை பிரமிக்க வைத்து. நல்ல எண்ணத்தை உண்டு பண்ணியது”.

அதே உணர்வைத்தான் உன்னிடம் கண்டேன்.

“என்னிடம் மட்டுமல்ல என் ஸ்டூடண்ட் ராகவனுடம் சொல்லி உள்ளேன். நீ போய் அவனைப்பாரு. அவன் உதவி செய்வான்”.

நிறைய ஆர்டர் கொடுக்கவும் அவரை நமஸ்கரித்து டாக்டர் ராகவனைப் பார்க்க சென்றாள்.

“எங்க டாக்டர் ரெபர் பண்ணினால் அந்த மருந்துகள் நிச்சயம் நூறு சதவீதம் சரியாக இருக்கும்” என்று நிறைய ஆர்டர் கொடுத்தான்.

இப்போது ராகவன் தொடர்பினால் மற்ற டாக்டர்கள் மூலம் ஆர்டர்கள் நிறைய வர தொடங்கின. கமிஷன் காசும் மனசுக்கு திருப்தி கொடுத்தது.

சரியாக  நாற்பத்தியொன்றாவது  நாள், சாதனா சொன்ன மாதிரி, மற்ற ரெப்களையும் வரச் சொல்லியிருந்தாள்.

ஸ்பெஷல் லஞ்ச் கொடுத்தாள். விக்னேஷ் சாதனவின் சாதனை மிகவும் பெருமையா இருக்கு. விடா முயற்சி தன்னம்பிக்கை நிறைந்த சாதனா நிஜமாகவே சாதனைப் பெண்தான் “.

“இப்போதெல்லாம்  எனக்கு டாக்டர் நரசிம்மன்  நட்பு மூலம் அவருடைய நண்பர்கள்  நிறைய ஆர்டர்கள் கொடுக்க  ஆரம்பித்து  உள்ளார்கள்.”

“உங்க வாழ்க்கையில் இது மாதிரி கதவுகள் திறக்கப்படாமல் தன்னம்பிக்கை குலைத்து உங்களை மனநிம்மதி இழக்க செய்யும். விடாது தட்டுங்கள். என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்ட கதவு நிச்சயமாகத் திறக்கும்.”

“அன்று  நீங்கள்   பேசிய பேச்சுதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது.” எல்லோருக்கும் நன்றி என்றாள் சாதனா.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT