மங்கையர் மலர்

மழைப் புராணம்

கல்கி டெஸ்க்

- கிர்த்திகா தரன்

தூறும் மழைநீர்

இடைவெளிகளில்

பரந்து விரிகிறது

நமக்கான ஈர வானம்

னையச் செய்த மழைமேல்

பொறாமையில்

மரத்தடியில் ஒதுங்கச் செய்தாய்.

நெருங்கி வந்த உன்னை,

மறுக்க நினைத்த என்னை

மழுங்கடித்து முத்தமிட்ட நெற்றியில் மரமழை

சொட்டுச் சொட்டாய்

சூடுபடுத்த

நிமிர்ந்த அக்கணத்தில்

கண்கள் முழுக்க மிதந்தது -

கடவுளின் துகள்கள்

நான் மட்டுமே தரிசிக்க.

நெஞ்சம் தொடும்

மழைத்துளியின் கனம்

தாங்க முடியாமல்

ஒதுங்கச் சொன்னேன்.

நீயோ நனையக் கூப்பிடுகிறாய்.

மூளையின் ரசாயனம் சுரக்கச் செய்து

இக்குளிரிலும் வெப்ப மெழுகாய்

உருக வைக்கும் நீ

கரைந்து வழிந்தோட,

என்னை மழையாய்

மாற்றும் ரசாயனம்

ஒரு குப்பி கொடு

அருந்திவிடுகிறேன்.

யர்திணைக்குக் கொடுக்காத

அச்செல்ல வார்த்தைகளை,

கொஞ்சல்களை, வருடல்களை

உன் நாய்க்குட்டிக்கு அளிக்கிறாய்

அது மழையில் குளித்து

அழகாக உதறும்பொழுது

கவனமாகத் தரையிலிருந்து

பொறுக்கிக் கொள்கிறேன் -

அக்கொஞ்சல் வார்த்தைகள்

மட்டுமல்ல

அத்தனை வருடல்களையும்

விரல் வரிகளையும்!

விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசை உங்களுக்கு இருக்கா? அதற்கு உங்களிடம் இருக்க வேண்டிய 10 பண்புகள் என்ன?

மகிழ்ச்சியை வரவழைக்கும் மந்திரம் இதுதான்!

வீட்டில் மகிழ்ச்சி பொங்க வாஸ்து சாஸ்திரம் காட்டும் ஓவியங்கள்!

நாக சைதன்யாவின் ‘தண்டேல்’ படத்தை வாங்கிய நெட் ஃப்லிக்ஸ்!

உலகிலே மிக உயரமான மரம் எது? எங்கு உள்ளது? தெரிந்துகொள்வோமா?

SCROLL FOR NEXT