செய்திகள்

113 பயணிகளுடன் விமானம்; கிளம்புமுன் தீப்பிடித்து எரிந்து பரபரப்பு!

கல்கி

சீனாவின் சோங்கிவிங் ஜியங்பெய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு திபெத் தலைநகர் லாசாவிற்கு செல்வதற்காக திபெத்திய ஏர்லைன் விமானம் ஒன்று 113 பயணிகள் மற்றும் 9 விமான பணியாளர்களுடன் கிளம்பத் தயார் நிலையில் இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென் விமானத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதுகுறித்து அந்த விமான நிலையத்திலிருந்து வெளியானத் தகவல்;

அந்த திபெத்திய விமானம் கிளம்புவதற்குத் தயாராக ரன் வேயில் நின்றிருந்தது. விமானத்தினுள் 113 பயணிகளும் 9 விமானப் பணியாளர்களும் இருந்தனர். அப்போது விமானத்தின் முன்பகுதியில் திடீரென தீப்பற்றியது.

இதையடுத்து விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப் பட்டனர். அதனால் உயிரிழப்பு எதுதும் ஏற்படவில்லை. ஒரு சிலருக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டதால், அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிட்டனர்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டது. இச்சம்பவம் குறித்து வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடலுக்கு அடியில் 93 நாட்கள் வாழ்ந்த நபருக்கு 10 வயது குறைந்தது! எப்படி சாத்தியம்?

பல்கலைக்கழகத்துக்கு நிகரானது உங்கள் அனுபவம் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

Isreal Gaza War: ரஃபாவில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம்… வெளியேறும் 8 லட்சம் பாலஸ்தீனர்கள்!

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!

வாத்தைப் போல அலகும், பாம்பைப் போல விஷமும் கொண்ட அபூர்வமான உயிரினங்கள்!

SCROLL FOR NEXT