செய்திகள்

நெல்லையில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகள் தீர்வு!

கல்கி டெஸ்க்

நெல்லையில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 439 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 117 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

திருநெல்வேலியில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ,நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் உட்பட மொத்தம் 439 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது . அதில் 117 வழக்குகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்ட நீதிபதிகள் சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதிபதிகள் மற்றும்திருநெல்வேலி வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் காமராஜ் வழக்கறிஞர்கள் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் தினேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2023ம் ஆண்டில் நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்த மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சென்னை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2023ம் ஆண்டின் நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆணைக்குழுவால் திருநெல்வேலி மற்றும் 5 தாலுகாக்களில் மொத்தம் 6 அமர்வுகளுடன் நடைபெற்றது.

மேற்கூறிய நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில்நிலுவையில் உள்ள நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 439 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி உட்பட 9 தாலுகாகளில் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களால் மொத்தம் 6 அமர்வுகளுடன் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சென்னையின் உத்தரவுக்கு இணங்க கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கூட்டத்தை கட்டுப்படுத்தி சமூக இடைவெளிகள் உடன் மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர் சேஷசாயி மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது. நிலுவையில் உள்ள வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 117 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT