செய்திகள்

இலங்கைக்கு பீடி இலைக் கட்டுக்கள் கடத்த முயற்சி; 16 பேர் கைது!

கல்கி டெஸ்க்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை கடத்த முயன்ற இலங்கை மீனவர்கள் 6 பேர் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அனைத்து பொருட்களும் பன்மடங்கு விலை அதிகரித்துள்ளது. எனவே தூத்துக்குடியில் இருந்து கஞ்சா, மஞ்சள், ஏலக்காய், பூச்சிக்கொல்லி மருந்து, மற்றும்  பீடி இலைகள் போன்றவை கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்படுவதாக தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று தூத்துக்குடி அருகே நடுக்கடலில் இந்திய கடலோர காவல் படையினர் வஜ்ரா என்ற கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நடுக்கடலில் 4 படகுகள் நிற்பது தெரியவந்ததும், இந்திய கடலோர காவல் படையினர் அங்கு விரைந்து 4 படகுகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில், இந்திய படகில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இரண்டு படகுகளின் மூலம் இலங்கைக்கு பீடி இலை பார்சல்களைலக் கடத்த இருந்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து நான்கு படகுகள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 1/2 டன் எடை கொண்ட 104 பீடி இலை கட்டுக்களையும் பண்டல்களையும் இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த 16 பேரும் கைது செய்யப்பட்டு நேற்றிரவு  தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு அழைத்து வந்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து இலங்கையை சேர்ந்த அந்த 6 மீனவர்கள் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 10 மீனவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் தெரியுமா உங்களுக்கு?

உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில்!

உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Vasuki Indicus: 47 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பு!

தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT