செய்திகள்

முதல் முறையாக கூண்டிலிருந்து வெளியே வந்து வானத்தைப் பார்த்த 28 வயதான சிம்பன்சி! அதிசயிக்க வைத்த வீடியோ!

கல்கி டெஸ்க்

தனது வாழ்நாள் முழுவதும் கூண்டிலேயே அடைக்கப்பட்டிருந்த 28 வயதான வனில்லா ( Vanilla ) என்ற சிம்பன்சி, புளோரிடாவில் உள்ள தனது புதிய வீடான சேவ் தி சிம்ப்ஸ் சரணாலயத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அது கூண்டிலிருந்து வெளியே வந்து முதன்முறையாக வானத்தை பார்த்து அதிசயித்து நின்ற வீடியோ, பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.

வனில்லா தனது 2 வயது வரை ஒரு மோசமான ஆய்வகத்தில் வாழ்ந்ததாக கூறப்படும் நிலையில், அதன்பின்னர், 1997ம் ஆண்டு அந்த ஆய்வகம் மூடப்பட்டதும், வனில்லா உட்பட சுமார் 30 சிம்பன்சிகளும் கலிபோர்னியாவில் இருந்த மூடப்பட்ட விலங்குகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு, 5 அடி சதுர கூண்டு வடிவிலான இடத்தில்தான் வனில்லா வாழ்ந்து வந்தது.

2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காட்டுத்தீயின் பாதிப்பையடுத்து, கலிபோர்னியாவின் மீன் மற்றும் வனவிலங்குத் துறையானது விலங்குகள் வாழ்வதற்கேற்ற புதிய வீடுகளைக் கண்டறிவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கடந்தாண்டு, புளோரிடா மாகாணத்தில், 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேவ் தி சிம்ப்ஸ் சரணாலயத்திற்கு வனில்லா மற்றும் அந்த சிம்பன்சி குழுவில் இருந்த விலங்குகளும் கொண்டு செல்லப்பட்டது.

இதுசம்பந்தமான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சேவ் தி சிம்ப்ஸ் சரணாலயத்திற்கு வந்ததும், கூண்டிலிருந்து வனில்லாவை திறந்து விட்டனர். அப்போது, ஏதோ அதிசயத்தை உணர்ந்ததுபோல், 28 ஆண்டுகளாக கூண்டிலே இருந்துவந்த வனில்லா, துள்ளிக்குதித்து வெளியே சாடியதோடு, முதன்முறையாக வானத்தை அன்னாந்து பார்த்து அதிசயித்துப்போகிறது. கூண்டிலிருந்து விடுபட்ட வனில்லா, தனது முந்தைய வாழ்க்கையிலிருந்து மாறுபட்ட இந்த புதிய உலக வாழ்க்கையை பிரமிப்புடன் ரசித்துப் பார்க்கும்படியாக அந்த வீடியோ அமைந்துள்ளது.

இந்த வீடியோ, தற்போது வைரலாகி வருவதோடு, பார்ப்போரின் மனதில் ஏதோ ஒரு அழகிய நெருடலையும் ஏற்படுத்திவிட்டுச் செல்கிறது. இதோ அந்த வீடியோ...

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

Kitchen Queen's tips: சமையலில் ராணியாக சில சமையல் குறிப்புகள்!

பசுவிற்கு ஏன் அகத்திக்கீரை கொடுக்கிறார்கள் தெரியுமா?

‘மாஸ்க்’ படத்தில் இணையும் கவின் மற்றும் ஆண்ட்ரியா!

வரலாற்றுக் களஞ்சியங்களாகத் திகழும் அருங்காட்சியகங்கள்!

SCROLL FOR NEXT