செய்திகள்

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பலி!

கல்கி டெஸ்க்

சீன நாட்டின் ஃபெங்டாய் மாவட்டத்தில் உள்ள பெய்ஜிங் சாங்ஃபெங் மருத்துவமனையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்து தொடர்பாக மதியம் 1 மணிக்கு முன்பு சீனாவில் அவசரக்கால குழுவுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எதிர்பாராத வகையில் ஏற்பட்ட இந்தத் திடீர் தீ விபத்தில் 21 பேர் பலியாகி உள்ளதாக சீன அரசின், ’பெய்ஜிங்’ தின இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்தத் தீ விபத்தில் சிக்கிய 71 பேர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டனர்.

தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துப் பிறகு, நோயாளிகள் சிலர் மருத்துவமனை கட்டடத்தின் மாடியில் இருந்து குதிக்கும் வீடியோ காட்சிகள் சிலவற்றை இணையவாசிகள் வெளியிட்டுள்ளனர்.

தேபோல், கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் ஜின்ஹுவா நகரில் உள்ள தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். தொழிற்சாலையின் மூன்றாவது மாடியில் பலர் சிக்கியதால் அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.

சீனாவில் இரு வேறு இடங்களில் நேற்று ஒரே நாளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

நம்மைச் சுற்றியே இருக்கு நமக்கான வாழ்க்கைப் பாடம்!

ஊட்டி, கொடைக்கானல் செல்வதற்கு இன்று முதல் இ பாஸ் எடுக்கலாம்!

சுய அன்பு தரும் 9 வித நன்மைகள் பற்றி தெரியுமா?

கோடைக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகள்!

ஐஸ்கிரீம் சாப்பிடும்போது எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

SCROLL FOR NEXT