Boat sink 
செய்திகள்

தென்னாப்பிரிக்காவின் மொசாம்பிக் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து 90 பேர் பலி!

பாரதி

நேற்று தென்னாப்பிரிக்கா மொசாம்பிக் கடற்பகுதியில் மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்தது. மொத்தம் 130 பேர் பயணம் செய்த இந்தப் 91 பேர் பலியாகிவுள்ளனர். மீதமுள்ள 39 பேரில் 5 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.

சுமார் 130 பேர் பயணம் செய்த மீன்பிடிப் படகு நம்புலா மாகாணத்தை அடையும்போது விபத்துக்குள்ளாகியது. நம்புலாவின் செயலாளர் ஒருவர் இந்த விபத்து குறித்துப் பேசினார். அதாவது, "படகில் அளவுக்கதிகமான நபர்களை ஏற்றிச் சென்றதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 91 பேர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். அதில் சிலர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.” என்று கூறினார். மீதமுள்ளவர்களைத் தேடும் பணித் தீவிரமாக நடந்து வருகிறது.

அதில் 5 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டெடுத்தனர். ஆனால் கடல் சூழல் தற்போது சரியாக இல்லை என்பதால் மற்றவர்களைத் தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மீட்டெடுக்கப்பட்ட ஐவரில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

100 பேர் ஏறக்கூடிய படகில் 130 பேர் பயணம் செய்ததற்கான காரணத்தை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். அதாவது தென்னாப்பிரிக்கா நாடுகளில்தான் இதுவரை நீரினால் பரவக்கூடிய நோய் அதிகமாகப் பரவியிருக்கிறது. அந்தவகையில் சென்ற ஆண்டு அக்டோபரில் இருந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 30 பேர் அந்த நோய்க்கு பலியாகிவுள்ளனர். அந்தநாட்டில் நோய் பரவுவதிலிருந்துத் தங்களை தற்காத்துக்கொள்வதற்காகவே 130 பேர் படகு மூலம் தப்பித்திருக்கின்றனர்.

நம்புலாவிலும் அதிக அளவு நோய் பரவுகிறது. ஏனெனில் நம்புலாவின் பக்கத்து இடமான கேபோ டெல்காடோவில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறுவதால் அங்குள்ள மக்கள் நம்புலாவிற்குதான் தப்பி வருகின்றனர்.

மொசாம்பிக், இந்திய பெருங்கடலின் நீளமான கடற்கரை மற்றும் தென்னாப்பிரிக்காவின் எல்லைப் பகுதிகளைக் கொண்டது. இதுவரை புயலால் 30 மில்லியன் பேர் அங்கு இறந்துள்ளனர். அதேபோல் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கடும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் போர்களால் மட்டுமே 5 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதேபோல் மில்லியன் கணக்கில் மக்கள் மற்ற நாடுகளுக்குத் தப்பித்து ஓடி இருக்கின்றனர்.

இப்படி மக்களை மில்லியன் கணக்கில் காவுவாங்கிய இந்த மொசாம்பிக், தற்போது  மேலும் 91 பேரை காவுவாங்கியுள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT