Kuwait fire accident 
செய்திகள்

குவைத்தில் கோர தீ விபத்து! நெஞ்சை உருக்கும் சம்பவம்! விபத்துக்குக் காரணம் என்ன?

கல்கி டெஸ்க்

குவைத் நாட்டில் மங்காப் நகரில் உள்ள ஆறு மாடிக் குடியிருப்பில் நேற்றுக் காலை 4:30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொத்தம்  160 தொழிலாளர் வசித்து வந்த அடுக்கு மாடி குடியிருப்பில்  நேற்று தீடீரென்று சமயலறையில் ஏற்பட்ட தீ, மளமளவென கட்டிடம் முழுவதும் பரவ தொடங்கியது. இதில் கட்டிடத்திற்குள் இருந்த நபர்கள் கீழே குதித்து தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால் அனைவராலும் தப்பிக்க இயலாமல் 49 பேர் தீ-க்கு இறையாகினர். மேலும் உயிரிழந்தவர்களின் 40 க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டிடம் கேரளாவை சேர்ந்த தொழிலதிபரும் NDPC குழுமத்தின் உரிமையாளருமான ஆபிரகாமின் சொந்த கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்தவர்களில் உடலை அவர்களின் இல்லத்திற்கு அனுப்பவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்கும் மாநில அமைச்சர் ஸ்ரீ கிர்த்தி வர்தன் சிங் உடனடியாக குவைத்துக்கு செல்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் குவைத்தில் உள்ள அதான், ஜாபர், ஃபர்வானியா, முபாரக் அல் கபீர் மற்றும் ஜஹ்ரா ஆகிய ஐந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனை அதிகாரிகளின் கூற்றுப்படி, காயமடைந்து அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் நிலையாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் குவைத் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அலி அல்-யாஹ்யாவிடம் பேசியுள்ளார். அங்கு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அவருக்குத் தெரிவித்திருக்கிறார். மேலும் உயிர் இழந்தவர்களின் உடல்களை விரைவாக அனுப்புமாறு வலியுறுத்தியுள்ளார்.

குவைத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் இந்திய தூதரகத்தின் மூலம் வழங்கப்படும் என வாக்குறுதி தரப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள உறவினர்கள் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பதற்கும்  தகவல்களை அறிந்து கொள்ளவும்  சில தொலைபேசி எங்களை ( +965-65505246) இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

இந்த தீ விபத்திற்கு முக்கிய காரணம், கட்டடத்தின் கீழ் தளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்கள் என கண்டறிந்துள்ளனர். இது குறித்து குவைத் நாட்டின் துணை பிரதமர் ஷேக் அஹமத் யூசுப் ரியல் எஸ்டேட் துறையினர் "இது போன்ற விபத்துகளுக்கு முக்கிய காரணம் அவர்கள் விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்காமல் இருப்பதே.  எனவே கட்டாயமாக கட்டடத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் கைது செய்யப்படுவார்" என தெரிவித்துள்ளார்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT