செய்திகள்

மாணவர்கள் காதலிக்க ஒரு வாரம் விடுமுறை!

கல்கி டெஸ்க்

ல்வி பயிலும் மாணவர்கள் காதலிக்க வேண்டும் என்பதற்காக சீனாவில் அந்நாட்டு கல்லூரிகள் ஒரு வாரம் விடுமுறையை அறிவித்துள்ளன. சீன நாட்டின் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதேபோல் குழந்தை பிறப்பு விகிதமும் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் கவலையடைந்துள்ள சீன அரசு, மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக, மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் சீன கல்லூரிகளும், தங்கள் நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்க புதிய அணுகுமுறை ஒன்றை கையாண்டுள்ளன. 'ஃபேன் மெய்' என்ற சீன கல்விக் குழுமத்தின் கீழ் செயல்படும் ஒன்பது கல்லூரிகள், மாணவர்கள் காதலிக்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை (ஒரு வாரம்) வசந்த கால விடுமுறையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.

இது சம்பந்தமாக, ’ஃபேன் மெய்’ கல்விக் குழுமத்தின்கீழ் செயல்படும் மியான்யாங் ஏவியேஷன் தொழிற்கல்வி கல்லூரியின் துணை முதல்வர் லியாங் குவோஹுய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாணவர்கள் இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும், காதலிக்கவும் இந்த வசந்த கால விடுமுறை அளிக்கப்படுகிறது. மாணவர்களே, கல்லூரியை விட்டு வெளியே செல்லுங்கள். இயற்கையுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வசந்த காலத்தின் நினைவுகளை நெஞ்சில் ஏந்திக்கொள்ளுங்கள்' என்று கூறி உள்ளார்.

வெஜ் ஸ்டஃப்டு யம்மி பப்ஸ்!

பிரிட்டிஷ் அரச மகுடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் உண்மையில் யாருக்கு சொந்தம் தெரியுமா?

ரஷ்யா- உக்ரைன் போரில் ஈடுபட்ட இந்தியர்கள் மீட்பு!

நோக்கியாவின் பரிணாமம்… மொபைல் உலகின் முன்னோடி! 

ஹிந்தி பிக்பாஸுக்கே தமிழ் சொல்லிக் கொடுத்த ஸ்ருதிகா… தமிழ் ரசிகர்கள பிடிச்சுட்டாருங்க!

SCROLL FOR NEXT