ஹிந்தி பிக்பாஸுக்கே தமிழ் சொல்லிக் கொடுத்த ஸ்ருதிகா… தமிழ் ரசிகர்கள பிடிச்சுட்டாருங்க!

Shrutika in Hindi Biggboss
Hindi Biggboss
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

ஹிந்தி பிக்பாஸிற்கு சென்ற ஸ்ருதிகா பிக்பாஸுக்கு தமிழ் சொல்லித்தந்த வீடியோதான் தற்போது தமிழ் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் தமிழ் பிக்பாஸிற்காக காத்துக்கொண்டிருந்த சமயத்தில், எந்த பிரபலங்கள் தமிழ் பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கப் போகிறார்கள் என்று நாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகா அர்ஜூன் சத்தம் இல்லாமல் ஹிந்தி பிக்பாஸில் போட்டியாளராக நுழைந்தார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

தமிழ் பிக்பாஸில் ஏன் ஸ்ருதிகாவை கூப்பிடவில்லை, ஸ்ருதிகாவின் வெகுளித்தன்மையை வட இந்தியாவில் ஏற்றுக்கொள்வார்களா? போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்தன. மேலும் சிலர் ஸ்ருதிகாவின் வீடியோவை மட்டும் தமிழில் டப்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிறக்கினர். மேலும் சிலர் என்னடா இது புதுசா ஹிந்திலா புரியுது என்று ஸ்ருதிகாவின் வீடியோ க்ளிப்பைப் பார்த்து பதிவிட்டனர். ஹிந்தி பிக்பாஸை கண்டுக்காதவர்கள், இப்போது ஸ்ருதிகாவிற்காகவே ஹிந்தி பிக்பாஸ் பார்க்கிறார்கள். 

அந்தவகையில் ஹிந்தி பிக்பாஸில் ஸ்ருதிகாவின் வீடியோ மட்டும் அதிகளவில் தமிழகத்தில் பகிரப்பட்டு வருகிறது. இப்போது அதுபோல ஒரு வீடியோதான் வைரலாகி வருகிறது. அதாவது ஸ்ருதிகா பிக்பாஸிற்கு தமிழ் கற்றுத்தருகிறார்.

அப்போது, ஸ்ருதிகா "ஹே" என்று கரடுமுரடான குரலில் சொல்கிறார். அதேபோல் ஹிந்தி பிக்பாஸ் தனது வழக்கமான குரலுக்கு மாறாக "ஹே" என்று ஹார்ஷான குரலில் சொல்கிறார். பின்னர் ஸ்ருதிகா “நீ எங்கயுமே” என்று சொன்னவுடன் பிக்பாஸ் “எங்க்யுமே” என்று திருப்பி சொல்கிறார்.

ஸ்ருதிகா “சென்னையை விட்டு வெளிய போகவே முடியாது” என்று சொல்கிறார். அதையும் பிக்பாஸ் அதே மாட்யுலேஷனில் “போகவே முடியாது” என்று தமிழ் கற்றுக்கொண்டதுபோல உற்சாகமாக பேசுகிறார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம் - பிளாக் (BLACK) - காலச் சுழலில் மாட்டிக் கொண்ட கணவன் மனைவி!
Shrutika in Hindi Biggboss

ஸ்ருதிகா You ar very Funny biggboss என்று அவரும் உற்சாகமாக சொல்கிறார்.

ஹிந்தி பிக்பாஸ் தமிழ் போட்டியாளரிடம் தமிழ் கற்றுக்கொள்கிறார். ஆனால், இங்கு சுனிதாவை தமிழ் நன்றாக கற்றுக்கொள்ள சொல்கிறார். இப்போ நம்ம என்ன சொல்றது???

logo
Kalki Online
kalkionline.com