செய்திகள்

இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி !

கல்கி டெஸ்க்

இந்தியாவில் 1996-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் உலக அழகிப் போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் 130 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடைசியாக 1996ம் ஆண்டில் உலக அழகிப்போட்டி நடைபெற்றது. அதன் பிறகு இந்தியாவில் உலக அழகிப் போட்டி ஏதும் நடைபெறவில்லை.

இதுவரை ரீட்டா, ஐஸ்வர்யா ராய், டயானா ஹெய்டன், யுக்தா முகி, பிரியங்கா சோப்ரா, மனுஷி சில்லார் ஆகிய 6 இந்திய பெண்கள் ‘மிஸ் வேர்ல்டு' பட்டத்தை வென்றுள்ளனர்.

இந்நிலையில், உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள போட்டி குறித்து. மிஸ் வேர்ல்ட் உலக அழகிப்போட்டி அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி கூறுகையில், "71-வது உலக அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி இந்தியாவில் நடக்க உள்ளது. ஒரு மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் 130 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர். உலக அழகிப் போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது" என்றார். மேலும் அழகு, பன்முகத்தன்மை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த போட்டி இருக்கும்" என்று தெரிவித்தார்

இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி என்பதால் இப்போட்டி மிகுந்த முக்கியதுவம் பெறுகிறது.

இந்த ஆண்டு போட்டியில் ‘மிஸ் இந்தியா' பட்டத்தை வென்ற சினி ஷெட்டி இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார். அவர் கூறும்போது, “உலகம் முழுவதும் இருந்து எனது சகோதரிகள் ‘மிஸ் வேர்ல்டு 2023' போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்தியாவின் பன்முகத்தன்மையை அவர்கள் புரிந்து கொள்வார்கள். போட்டியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன்" என்றார்.

கடந்த ஆண்டு ‘மிஸ் வேர்ல்டு' பட்டத்தை வென்ற போலந்தை சேர்ந்த கரோலினா கூறும்போது, “. இந்தியாவை எனது சொந்த நாடாகவே கருதுகிறேன். ஒரு மாதம் ‘மிஸ் வேர்ல்டு 2023' போட்டிகள் நடைபெறும். இதன் மூலம் இந்திய குடும்பங்களின் பாரம்பரியம், இந்தியர்களின் அன்பு, மரியாதை, விருந்தோம்பல் நடைமுறைகள் உலகம் முழுவதும் சென்றடையும்" என்று தெரிவித்தார்.

தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!

பாதாமி குகைகளின் ஆச்சரியத் தகவல்கள் தெரியுமா?

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

ஒயிட் ஆனியனில் இருக்கும் ஒப்பற்ற நன்மைகள்!

SCROLL FOR NEXT