செய்திகள்

லடாக்கில் அடுத்தடுத்த நிலநடுக்கம்: இரு நாட்களாக மக்கள் பீதி

கல்கி டெஸ்க்

ன்று லடாக்கில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இச்சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம்  அறிக்கையின் படி லடாக்கின் லேவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.36 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல், இன்று காலை 9.30 மணியளவில் கார்கிலில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்றும் தொடர்ந்து வந்த நிலநடுக்கத்தை அடுத்து வீடுகளிலிருந்து பதட்டத்துடன் வெளியேறி மக்கள் சாலைகளில் தங்கினர்.  இச்சம்பவத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பொதுமக்கள் பீதி விலகாத நிலையில் அச்சத்துடன் வீதியில் தஞ்சமடைந்திருந்தனர்.

சிரித்து வாழ வேண்டும்!

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

காய்கறித் துண்டு, பழத் துண்டு தெரியும்; உளவியல் சொல்லும் மெல்லிய துண்டம் தெரியுமா?

பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு?!

Neuroplasticity-இன் அற்புதமான செயல்பாடுகள் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT