Air ticket prices have increased. 
செய்திகள்

பொங்கல் பண்டிகையால் பல நூறு மடங்குகள் உயர்ந்த விமான டிக்கெட் விலை! 

கிரி கணபதி

தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னையில் வேலைக்கல்வி என தங்கியிருப்போர் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். 

பேருந்துகள், ரயில்கள் போன்ற எல்லா போக்குவரத்திலும் நெரிசல்கள் இருப்பதாலும், இடம் கிடைக்காததாலும் பலர் விமானங்களில் செல்ல முடிவெடுக்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து மதுரை, சேலம், கோவை போன்ற மாவட்டங்களுக்கு விமானம் வழியாக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசாங்கமும் மக்களுக்கு உதவி புரியும் வகையில் சிறப்பு பேருந்துகளையும் ரயில்களையும் இயக்கினாலும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில்  விமான நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியுள்ளனர். பொதுவாக சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டும் என்றால் 3624 வசூலிக்கப்பட்டு வந்த இடத்தில், தற்போது 13000 ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல மதுரைக்கான கட்டணம் 3367 ரூபாயிலிருந்து 17,000 ஆகவும், திருச்சிக்கான கட்டணம் 2264 இல் இருந்து 11000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பொங்கலுக்கு ஊருக்கு செல்வோரால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ள நிலையில், விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்திருப்பது மக்களை கவலையடையச் செய்துள்ளது. 

இருப்பினும் வேறு வழியின்றி பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் தான் கொண்டாட வேண்டும் என்கிற நோக்கத்தில் கட்டணங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இவ்வளவு விலை ஏற்றத்திற்கு பின்னும் விமானத்திற்கு டிக்கெட் கிடைக்காத நிலை இருப்பதால், சிறப்பு விமானங்கள் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?

SCROLL FOR NEXT