செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு: கர்நாடக முதல்வர் சித்தராமையா!

ஜெ.ராகவன்

தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

காங்கிரஸ் இலவசங்களை அறிவித்துள்ளதால் கர்நாடக அரசின் கஜானா காலியாகிவிடும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனால், நாங்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு வெள்ளிக்கிழமை சட்டப்பரேவையில் நிதிநிலை அறிக்கைய தாக்கல் செய்துள்ளோம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் காங்கிரஸ் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.52,000 கோடி தேவைப்படும். எதிர்க்கட்சிகள் எங்களை விமர்சித்து வந்துள்ள போதிலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்ஜெட்டில் வழி செய்துள்ளோம் என்று சித்தராமையா தெரிவித்தார்.

நீங்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை ஊடகங்கள் வாயிலாக பார்த்திருப்பீர்கள் மற்றும் பத்திரிகைகளில் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். அனைத்து வாக்குறுதிகளுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட 76 திட்டங்களையும் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளோம் என்றார் முதல்வர்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 200 யூனிட் வரை இலவச மின்சாரம், ஏழைகளுக்கு 10 கிலோ இலவச அரசி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ2000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 என ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ கட்சி தேர்தலுக்கு முன் உறுதியளித்திருந்தது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் கிருஹ லெட்சுமி திட்டம் மூலம் 1.30 கோடி பேர் பயனடைவார்கள். 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கிருஹஜோதி திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டுக்கு ரூ.9,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி வழங்கும் அன்னபாக்யா திட்டத்துக்கு ரூ.10.275 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4.42 கோடி ஏழை மக்கள் பயன்பெறுவார்கள்.யுவநிதி திட்டத்தின் கீழ் வேலையில்லாத இளைஞர்களுக்கு பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000-ம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம்  ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் 3.7 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் செலவின மதிப்பீடு ரூ.3,27,747 கோடியாக அதிகரித்துள்ளது. இது சென்ற ஆண்டில் (2022-23 இல்) ரூ.2,65,720 கோடியாக இருந்தது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT