Anil Chauhan 
செய்திகள்

நாட்டின் முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்!

கல்கி டெஸ்க்

நாட்டின் முப்படை தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினட் கர்னல் அனில் சவுகானை மத்திய அரசு நியமித்துள்ளது.

 -இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;

 கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்த பிபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து இந்தியாவின் புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

 -இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

 அனில் சவுகான் 1961ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி பிறந்தவர். 1981-ம் ஆண்டு 11-வது கூர்கா ரைஃபிள் கிளப்பில் இணைந்து தனது ராணுவ சேவையைத் தொடங்கினார்.

அவர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி அகாடமி மற்றும் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியிலும் பயிற்சி பெற்றவர்.

நாட்டிற்காக சுமார் 40 ஆண்டுகாலம் சேவையாற்றிய அனில் சவுகான் கடந்த 2021-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது நாட்டின் புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அனில் சவுகான் பரம்விசிஷ்ட் சேவா உட்பட பல உயரிய பதக்கங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT