செய்திகள்

கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் 500 மதுக்கடைகள் மூடும் அறிவிப்பு!?

கல்கி டெஸ்க்

மிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு  பிறந்த நாள் விழா வரும் ஜூன் மாதம் 3ம் தேதி அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக் கடைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே  டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே இருந்த அதிமுக அரசும் சரி, தற்போது இருக்கும் திமுக அரசும் சரி, மதுக்கடைகள் மூடப்படும் என்று கூறுகின்றனவே ஒழிய, ஒரு கடையும் மூடப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, புதுப்புது வடிவத்தில் பொதுமக்களின் கரங்களில் சுலபமாக மது பாட்டில்கள் கிடைக்க வழிவழி செய்துதான் வருகின்றன.

இந்த நிலையில், சமீபத்தில் தமிழக திமுக அரசு முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் இயங்கிவரும் 5,289 டாஸ்மாக் மதுக்கடைகளில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பை தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளையெட்டி  வரும் ஜூன் மாதம் 3ம் தேதி தமிழக அரசு வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதற்காக மூடுவிழா செய்யப்பட உள்ள 500 டாஸ்மாக் மதுக்கடைகளை அடையாளம் காணும் பணி நிறைவடைந்து இருப்பதாகவும், விரைவில் அந்த மதுக்கடைகளை மூடுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT