செய்திகள்

2023-24 பட்ஜெட்: 7 லட்ச ரூபாய் வரை வரி இல்லை - நடுத்தர வர்க்க மக்களுக்கு நற்செய்தி!

ஜெ. ராம்கி

2023-24 ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரி சீர்திருத்தங்கள்தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வந்தன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரியை பொறுத்தவரையில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறார். ஆண்டுதோறும் முறையாக வருமான வரி கட்டுபவர்களுக்கு இனிப்பான செய்திகள் கிடைத்திருக்கின்றன.

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது நடுத்தர வர்க்க மக்களுக்கு குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு சற்று மேலே உள்ள மாத சம்பளம் பெறுபவர்களுக்கு கிடைத்த நல்ல செய்தியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வருமான வரி விலக்கு தொடர்பான சலுகையை எதிர்பார்த்து கடந்த மூன்று ஆண்டுகளாகவே காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. புதிய வருமான வரி கணக்கீட்டுத் திட்டம், பழைய வருமான வரி கணக்கீட்டுத் திட்டம் என இரண்டும் இருந்தாலும் நடுத்தர வர்க்க வருமான வரி கட்டுபவர்களுக்கு பெரிய அளவில் பலன் இல்லாமல் இருந்து வந்தது.

5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை என்கிற நிலை சில ஆண்டுகளாக இருந்து வந்தது. இது மேலும் நீட்டிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது தவிர வருமான வரி விதிப்பில் ஏற்கனவே இருந்த ஆறு பிரிவு, ஐந்து பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.

ரூ.3 லட்சம் வரை - வரி இல்லை

ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை- 5 சதவீத வரி (வரி தள்ளுபடி உள்ளதால் இந்த பிரிவினர் வரி செலுத்த தேவையில்லை)

ரூ.6 முதல் ரூ.9 லட்சம் வரை - 10 சதவீத வரி

ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரை - 15 சதவீத வரி

ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை - 20 சதவீத வரி

ரூ.15 லட்சத்திற்கு மேல்- 30 சதவீத வரி.

நடுத்தர மக்களுக்கு மட்டுமல்ல உயர் நடுத்தர மக்களுக்கும் புதிய வருமான வரி விதிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதிக சம்பளம் பெறுபவர்கள் முன்னர் 40 சதவீதத்திற்கும் அதிகமாக வருமான வரி கட்ட வேண்டிய நிலை இருந்தது. இனி 30 சதவீத வரி கட்டினால் போதும்

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT