குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 100 பேர் பலியான சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
பாலம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக அதன் மீது சுமார் 500 பேர் வரை நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் 400 பேர் பாலம் அறுந்து விழுந்ததில் ஆற்றில் விழுந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
பாலம் அறுந்து விழுந்த தகவல் கிடைத்த உடனே தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, துரிதமாக மீட்புப்பணிகளை தொடங்கினர். அவர்களுடன் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றனர். இதுவரை 100 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆற்றில் தொடர்ந்து மீட்புப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.