முதல்வர் ஸ்டாலின்  
செய்திகள்

கள ஆய்வில் முதலமைச்சர் செங்கல்பட்டு பரனூர் அரசு மறுவாழ்வு மையத்தில் திடீர் ஆய்வு!

கல்கி டெஸ்க்

பரனூரில் உள்ள அரசு மறு வாழ்வு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தங்கியுள்ள முதியவர்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில் செங்கல் பட்டு அருகே உள்ள பரனூரில் உள்ள அரசு மறு வாழ்வு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தங்கியுள்ள முதியவர்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆவணங்களை சரிபார்த்து வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மூன்று மாவட்ட காவல் கண்காணிப் பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.

Stalin

கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு தான் மிக முக்கியமானது என தெரிவித்தார். சில சமயங்களில் சில பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், பெரிய பிரச்னையாக மாறிவிடுவதாக கூறிய முதலமைச்சர், காவல்துறையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். காவல்நிலைய மரணங்கள் இல்லாத நிலை தொடர வேண்டும் என்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், மகளிர் குழுக்கள், மீனவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இதில், தலைமை செயலாளர் இறையன்பு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார், கடலூர் மாவட்ட ஆட்சியர் பால சுப்பிரமணியம் ஆகியோரும் பங்கேற்றனர்.

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

கவிதை: அவளுக்கென்று ஒரு மனம்!

SCROLL FOR NEXT