MuKa .Stalin 
செய்திகள்

உயிரிழந்த மாணவி பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின்!

கல்கி டெஸ்க்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்திற்கு வருத்தம் தெரிவிக்க இன்று முதல்வர் ஸ்டாலின் வியாசர்பாடியில் உள்ள ப்ரியாவின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் 15 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து விளையாட்டில் தேசிய அளவிலானபோட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தார் ப்ரியா. அங்கு சிகிச்சைக்காக சென்ற பிரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

Stalin

பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த மாணவி ப்ரியாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. சிகிச்சைப் பலனின்றி ப்ரியா உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ப்ரியாவின் மரணத்திற்கு 10 இலட்ச ரூபாய் இழப்பீடாக வழங்குவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் அறிவித்திருந்தார்.

இதற்காக பிரியாவின் வியாசர்பாடி வீட்டுக்கு நேரில் சென்று பிரியாவிற்கு அஞ்சலி செய்த தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இழப்பீடு தொகைக்கான காசோலையும், பணி நியமன ஆணையும் வழங்கியுள்ளார்.

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?

SCROLL FOR NEXT