செய்திகள்

தைவானை சுற்றி வளைத்த சீனாவின் போர்க்கப்பல்கள் - பதட்டமான அமெரிக்கா

ஜெ. ராம்கி

9 போர்க்கப்பல்கள், 38 போர் விமானங்களை தைவானை சுற்றி சீனா நிறுத்தி வைத்திருப்பதால் பதட்டம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தைவானில் வழக்கமாக நடைபெறும் பாதுகாப்பு பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சீன ராணுவத்தின் நடவடிக்கையை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருவதாக வாஷிங்கடனிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 கடந்த இரண்டு நாட்களாகவே சீனாவின் போர் விமானங்கள், தைவானின் பாதுகாப்பு எல்லைக்குள் அத்து மீறி நுழைவதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து வந்தது. இந்நிலையில்தான் சீன ராணுவம் தடாலடியாக 38 போர் விமானங்களையும், 9 கடற்படைக் கப்பல்களையும் தைவானைச் சுற்றி நிறுத்தியிருக்கிறது.

 இவற்றில் 32 விமானங்கள் தைவான் தீவுக்கும் சீனாவின் பகுதிக்கும் இடைப்பட்ட எல்லைப்பகுதியை தாண்டி பறந்து சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு பயிற்சிகளை ஜீலை மாதத்தில் தைவான் நாட்டு ராணுவம் மேற்கொண்டு வருவதுண்டு. அந்நிய படையெடுப்புக்கு எதிராகவும், வான்வழி தாக்குதல்களை முறியடிக்கவும் ஆண்டுதோறும் ஹான் குவாங் என்னும் பயிற்சியில் ஈடுபடுவதுண்டு.

 இத்தகைய தயாரிப்பு பயிற்சியில் தைவான் ஈடுபடுவதை சீனா விரும்புவதில்லை.  பயிற்சிக்கு நடைபெறும்போதெல்லாம் சீனா ராணுவம் பதட்டமான நிலைமைய உருவாக்குவதுண்டு. அடுத்த வாரம் தைவான் ராணுவம் ஹான் குவாங் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சீனா ராணுவம், அதிரடியாக போர் விமானங்களையும் போர்க்கப்பல்களையும் தைவானை நோக்கி அனுப்பி வைத்திருக்கிறது.

 தைவானுக்கு முழு உரிமை கொண்டாடி வரும் சீனா, உக்ரைன் போருக்கு பின்னர் தைவான் விஷயத்தில் கவனமாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவும் தைவானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக இருக்கிறது. இன்னொரு உலகப்போர் மூண்டால், தைவான் நாடுதான் களமாக இருக்கும் என்று உலக அரசியல் ஆய்வாளர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

 தைவான் பகுதியில் அமெரிக்காவின் தலையீட்டை சீனா விரும்பவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் தைவான் அதிபர் ட்ஸாய் இங்-வென் உடன் அமெரிக்காவின் நாடாளுமன்ற செயலாளர் கெவின் மெக்கார்த்தியின் சந்திப்பு நிகழ்ந்தபோது, சீனா வீறுகொண்டு எழுந்தது. தைவானை சுற்றிலும் கடல் மார்க்கமாகவும், வான்வெளியிலும ஏராளமான போர் பயிற்சிகளை மேற்கொண்டு ஒரு பதட்டமான நிலையை உருவாக்கியது. இந்நிலையில் மூன்று மாதங்கள் கழித்து திரும்பவும் ஒரு பதட்டமான நிலை ஏற்பட்டிருக்கிறது

அர்த்தநாரீஸ்வரராக அருளும் தட்சிணாமூர்த்தி எங்கு காட்சி தருகிறார் தெரியுமா?

ஹைலூரோனிக் அமிலம் என்றால் என்னவென்று தெரியுமா?

செவித்திறன் பாதிப்புகளும் நிவாரணமும்!

உங்க ஸ்மார்ட்போன் மெதுவா சார்ஜ் ஏறுதா? அதற்கான தீர்வு இதோ! 

மரங்கள் சூழ வாழ்வதில் கிடைக்கும் நன்மைகளை அறிவோமா?

SCROLL FOR NEXT