Srilanka and China 
செய்திகள்

இலங்கைக்கு வெள்ள நிவாரணம் அளித்த சீனா!

பாரதி

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சீனா வெள்ள நிவாரணமாக 30 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போது மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இப்போதுதான் ஒரு புயல் கரையை கடந்தது. இதனையடுத்து மீண்டும் ஒரு புயல் வந்துள்ளது. ஆனால், இலங்கையில் சமீபத்தில்தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இலங்கை தனது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இப்போதுதான் படிபடியாக முன்னேறி வருகிறது.

இலங்கையில் பால், எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட தட்டுப்பாடு ஏற்பட்டு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. இதனால் மக்கள் எழுப்பிய போராட்டங்கள், அரசின் திணறல் என அனைத்தும் ஒட்டுமொத்த ஆசியாவையும் அச்சமடைய வைத்தது. அந்த அளவிற்கு இலங்கை மோசமான நிலையில் இருந்தது. அந்த நிலையை போக்க இலங்கை அரசுக்குப் பிற நாடுகளில் கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டது. 

இப்படி இலங்கை பொருளாதார ரீதியாக சரிவடையும் நேரத்தில் சீனாவே உதவி செய்து வருகிறது.

இலங்கை ஐஎம்எஃபிடம் கடன் வாங்கியது. என்னத்தான் கொஞ்சம் பொருளாதாரத்தில் இப்போது வளர்ந்தாலும் கடனை அடைக்கும் அளவிற்கு வளரவில்லை என்பதே உண்மை. ஆகையால் கடனை அடைக்க இலங்கைத் திணறியது. இந்தநிலையில்தான் சீனா உதவிக் கரம் நீட்ட முன்வந்தது. அதேபோல் பிற கடன்களை அடைக்கவும் கொழும்பு விமான நிலையத்தையும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மேம்படுத்த நிதியுதவி வழங்குவதாகவும் சீனா கூறியது.

இப்படியான நிலையில், சமீபத்தில் இலங்கையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று பிற்பகல் இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த சீன தூதுவர் Qi Zhenhong 30 மில்லியன் ரூபாவை நேரில் வழங்கினார். அப்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்கு எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கடந்த காலங்களில் பல மாகாணங்களில் நிலவிய சீரற்ற வானிலையினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்ததுடன் விவசாய நிலங்கள் பலவும் அழிந்தது குறிப்பிடத்தக்கது.

முகத்தை மூடித் தூங்குபவரா நீங்கள்? அச்சச்சோ போச்சு!

குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!

முகம் ஒரு ஓவியம் என்றால், உதடுகள் அதன் இதயம்!

மரங்களைப் பற்றி மனிதர்கள் ஏன் கவலைப்படுவதில்லை?

இத தெரிஞ்சுக்காம யாரும் ஸ்மார்ட்போன்  வாங்காதீங்க! 

SCROLL FOR NEXT