கொரோனா  
செய்திகள்

கொரோனாவின் புது வேரியண்ட் ERIS.. பாதிப்பை ஏற்படுத்துமா?

விஜி

கொரோனா வைரஸின் புதிய திரிபான ERIS, மஹாராஷ்ட்ராவில் கண்டறியபட்டுள்ளது.

கொரோனா, பொதுமுடக்கம், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  ஓராண்டுக்கு முன்பு வரை நாம் தினமும் கேட்டுகொண்டிருந்த வார்த்தைகள் இவை. இப்போது இது குறித்த கவலைகளை முற்றிலும் நாம் கடந்த ஒரு சூழல் என்று ஆறுதல் அடைய நினைக்கும் வேளையில், கோவிட்டின் புதிய திரிபான ERIS, குறித்த செய்தி குழப்பத்தை விளைவித்துள்ளது.

கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜுலையில் 70ஆக இருந்த நிலையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி 115ஆக அதிகரித்தது. மே மாதம் இந்த புதிய திரிபு கண்டறியபட்டது, இப்போது இரண்டு மாதங்களை கடந்துவிட்ட நிலையில் கவனிக்கும்படியாக எந்த வித மாற்றத்தையும் இந்த திரிபு கொண்டுவரவில்லை. ஆனால் கோவிட் பாதிப்பாலும், தடுப்பூசியாலும் தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி சற்று குறைந்திருக்கும் என்பதால் இந்தியா எச்சரிக்கையோடு இதை அணுகுவது நல்லது என்கின்றனர் சில மருத்துவர்கள்.

மருத்துவர்கள் இப்படி சொல்வதற்கு காரணம் உள்ளது. முதலில் பிரிட்டனில் தான் இந்த திரிபு கண்டுபிடிக்கபட்டது. அந்நாட்டில் மூத்த குடிமக்கள் இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவில் இந்த பாதிப்பு இருந்தது. இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றாலும், எச்சரிக்கையோடு அனுக வேண்டும் எனவும், பூஸ்டர் ஷாட்களை எடுத்துகொள்ளவெண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புதிய மாறுபாடு குறித்த கவலை என்பது பல காரணிகளை அடிப்படையாக கொண்டது. முதலில் அதன் பரவும் தன்மை, அடுத்து அதன் தீவிரம் இறுதியாக அவற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளின் செயல்திறன் ஆகியவற்றை பொருத்தது. வைரஸ்கள் பொதுவாகவே உருமாறும் திறன் கொண்டது என்பதால் புதிய திரிபு வருவதற்கான வாய்ப்புகள் எப்போதுமே உண்டு. இப்போதைய உருமாற்றம் அடைந்த eris வகை உலக சுகாதார அமைப்பால் உற்றுநோக்கப்பட்டுவருகிறது. இந்தியாவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம் தடுப்பூசிகளால் தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி குறைந்து வருகின்றது என்கின்றனர் மருத்துவர்கள்.

சளி, இருமல்,காய்ச்சல், உள்ளிட்டவையே இவற்றின் அறிகுறிகளாக உள்ளன. பொதுவாக உருமாறும் திரிபுகள் அதிகம் பரவக்கூடியவையாக இருக்கும். ஆனால் இது ஒமைக்ரான் வகையை சேர்ந்தது என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் கருதலாம். இருப்பினும் சுகாதாரமாக இருப்பது, முகமூடி அணிதல், வெளியே சென்று வந்தால் முறையாக கை கழுவுதல் போன்ற நடைமுறைகளை பின்பற்றுவது முன்னெச்சரிக்கையாக பலன் தரும். தவிர டெங்கு, மலேரியா போன்ற பிற காய்ச்சல்களும் அதிகம் ஏற்படும் காலம் இது என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

SCROLL FOR NEXT