செய்திகள்

சென்னையில் தல தோனி.. எதற்கு தெரியுமா?

விஜி

தமிழகத்தில் தோனி ரசிகர்கள் எக்கச்சக்கமானவர்கள் என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக சென்னையில் தோனியை கொண்டாடாதவர்கள் யாருமே இல்லை. கடந்த 2 நாளுக்கு முன்பு தான் தோனியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், தோனியின் ரசிகர்களுக்கு மற்றொரு நற்செய்தியாக அவர் சென்னைக்கு வருகை தந்துள்ளார். ஏன் எதற்காக என்பது குறித்து பார்க்கலாம்.

லெட்ஸ் கெட் மேரீட் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தோனி மற்றும் சாக்‌ஷி தோனி கலந்து கொள்கிறார்.

தமிழில் தோனி எண்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பாக, எல்.ஜி.எம் (லெட்ஸ் கெட் மேரீட்) படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தை தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி வழங்குகிறார்.

எல்.ஜி.எம் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இவருக்கு ஜோடியாக லவ் டுடே புகழ் இவானா நடித்து உள்ளார். இவர்களுடன் நதியா, பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு, ஆர்.ஜே.விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி உள்ளது. எல்ஜிஎம் படம் ஒரு யூத்ஃபுல் ரொமாண்டிக் என்டர்டெய்னராக உள்ளது. நகைச்சுவைக்கும் இப்படம் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது.

திருமணம் தொடர்பாக காதலிக்கும், அம்மாவுக்கும் இடையே துவண்டு போகும் இளைஞனின் கதையாக இப்படம் அமைய வாய்ப்பு உள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் லெட்ஸ் கெட் மேரீட் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நாளை ( ஜூலை 10) சென்னையில் நடக்கிறது. இந்த விழா சென்னையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி ஆகியோர் சென்னைக்கு வருகை தந்துள்ளார். அவர்கள் தான் பாடல் மற்றும் ட்ரெய்லரை வெளியிடுகிறார்கள்.

தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!

பாதாமி குகைகளின் ஆச்சரியத் தகவல்கள் தெரியுமா?

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

ஒயிட் ஆனியனில் இருக்கும் ஒப்பற்ற நன்மைகள்!

SCROLL FOR NEXT