செய்திகள்

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் தெரியுமா? - ஆதி புருஷ் படத்தை கலாய்க்கும் ஷேவாக்!

கல்கி டெஸ்க்

ஆதிபுருஷ் திரைப்படத்தை பார்த்துவிட்டு கிரிக்கெட் வீரர் சேவாக் சமூக வலைத்தளத்தில் இட்ட பதிவு தற்போது சமூக பேசுபொருளாகி இருக்கிறது.

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் கடத்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ராமாயணத்தை தழுவி உருவான இந்தப் படத்தில் ராமனாக பிரபாஸும் சீதையாக கிர்த்தி சனோனும் நடிக்க, ராவணனாக சயிப் அலிகான் நடித்திருந்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த திரைப்படம் ஏனோ ரசிகர்களைப் பெரிதாக கவரவில்லை.இந்தப் படத்தில் காட்சிகளும் வசனங்களும் தவறாக சித்தரித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. தெலுங்கு மாநிலங்களில் மட்டும் இந்தப் படத்துக்கு முதல் நாளில் நல்ல ஓபனிங் இருந்தது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகிய போதே அதன் கிராஃபிக் காட்சிகள் இணையதளங்களில் பயங்கரமாக கிண்டல் செய்ய பட்டது.

குறிப்பாக இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் கார்ட்டூன் படம் பார்க்கும் உணர்வைத் தருவதாக இந்தப் படத்தை கலாய்த்து வருகின்றனர். இது திரைப்படத்தின் டீசரில் 3டி காட்சிகள் கேலிச்சித்திரம் போலிருக்கிறது என்று பல விமர்சனங்கள் வெளி வந்ததையடுத்து விழித்துக் கொண்ட பட குழுவினர்கள் திட்டமிட்ட நேரத்தில் திரைப்படத்தை வெளியிடாமல் சிறிது காலம் எடுத்துக் கொண்டு டீசரில் இன்னும் பல திருத்தங்களை செய்து வெளியிட்டார்கள்.

ஆனால் படம் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறாததால் ஆதிபுருஷ் வசூலை குவிக்க தவறியது. பாக்ஸ் ஆபிஸில் இந்த திரைப்படம் இருக்கும் நிலையைக் கண்டு டிக்கெட்டின் விலையை குறைத்தும் ரசிகர்கள் திரைப்படம் பார்க்க எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. இதனால் திரைப்படம் படுதோல்வி அடைந்திருக்கிறது.

இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என ஆதிபுருஷ் படம் பார்த்த பிறகு தான் புரிந்தது என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். ஆதிபுருஷ் பார்த்து நொந்து போய் கமெண்ட் செய்த கிரிக்கெட் வீரர் சேவாக் விழுந்து விழுந்து ரசிகர்கள் வருகிறார்கள் . இது விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமிலிருந்து பியூட்டி ஃபில்டர்ஸ் நீக்கப்படுவதற்கு காரணம் என்ன?

மாற்றம்… அது ஒன்றே என்றும் மாறாதது!

News 5 – (20.09.2024) த.வெ.க. முதல் மாநாடு தேதி அறிவிப்பு!

Ind Vs Bang: சேப்பாக்கத்தில் இதுதான் அஸ்வினுக்கு கடைசி போட்டியா? வெளியான தகவல்!

தங்கத்தால் சாதிக்க முடியாததை சங்கத்தால் சாதிக்க முடியும்!

SCROLL FOR NEXT