செய்திகள்

நீர் மேலாண்மைக்கு உதவும் அறக்கட்டளை: ‘நண்பன்’!

லதானந்த்

நண்பன் அறகட்டளை (Mother For Mother Nature) இயற்கை விவசாயம், மகளிர் மேம்பாடு மற்றும் விளையாட்டு எனப் பல்வேறு துறைகளில் தனது சேவையை ஆற்றிவருகிறது.

தற்போது இந்த நண்பன் அறக் கட்டளை, நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குளம், நாச்சான் குளம், வருசாக் குளம் ஆகியவற்றையும் வாய்க்கால்களையும் தூர்வாரி, ஆழப்படுத்தும் வேலையை, அமெரிக்கத் தமிழரான நண்பன் குழுமத்தின் இணை நிறுவனர் (Co founder ) ‘நண்பன்’ சக்திவேல் தலமையில் நிறைவேற்றிவருகிறது.

இவருடன் ‘நண்பன்’ பிரீத்தா இணைந்து வழிநடத்திச் செல்கிறார். காவேரி டெல்டா பகுதியைச் சார்ந்த ‘நண்பன்’ நிமல் ராகவன், தங்கக்கண்ணன், சித்தார்த் ஆகியோரும் கைகோர்த்துள்ளனர்.

இந்த நண்பன் நீர் மேலாண்மை திட்டத்தில், சுமார் 410 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளங்களைத் தூர்வாருவதன் முலம் 600 கோடி லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும். இதனால் சுமார் 12,000 விவசாயிகள் பயன்பெறுவர். மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, நீர் 40 முதல் 100 அடிக்குள் கிடைக்க வாய்ப்பு ஏற்ப்படும் என்கின்றனர் இந்த அறக்கட்டளைக் குழுவினர்.

இந்தப் பணியைச் செய்து முடிக்க இரண்டு மாதம் கால அவகாசம் ஆகும் எனவும் இந்த பணிக்காக புதியதாக ரூ.37.50 லட்சம் மதிப்புள்ள பொக்லைன் எந்திரத்தை ‘நண்பன்’ மக்கள் பயன்பாட்டுக்காக வழங்கியுள்ளது. இந்த 410 ஏக்கர் பரப்பளவுள்ள குளங்களைத் தூர்வார ஆகும் எரிபொருள் செலவான ரூ.3 முதல் 4 லட்சத்தையும் நண்பன் அறங்கடளை ஏற்கும் தெரிவித்தனர்.

நண்பன் அறக்கட்டளை, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நீர் மேலாண்மைத் திட்டங்களை வலுப்படுத்தும் வகையில் மேலும் 10 புதிய பொக்லைன் எந்திரங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நீர் மேலாண்மைத் துவக்க விழாவில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். “நீரின் தேவை அறிந்து இவர்கள் செய்யும் உதவி மிகப் பெரியது. இந்த அறக்கட்டளை மேலும் வளர வேண்டும்; இவர்கள் சமூகப் பணி தொடர வேண்டும்” என்று வாழ்த்தினார்.

உங்கள் பகுதியில் ஏதேனும் நீர் மேலாண்மை உதவி தேவைப்பட்டால் கீழ்க்கண்ட தொலைபேசி எண் மற்றும் இணையதள முகவரியில் தொடர்புகொள்ளவும்.

Mail id: farmers@nanbanfoundation.org

Contact: 9962200666.

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

குழந்தைகளின் தனித்திறமையை வளர்த்தெடுப்பது எப்படி?

துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

SCROLL FOR NEXT