ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை விட ஆண்களே அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பர்சேஷிங் என்றாலே அனைவரும் கைகளைக் காட்டுவது பெண்களைத்தான். எப்போதும் அனைவர் எண்ணத்திலும் பெண்கள்தான் அதிகம் துணி, நகை என வாங்கி கொள்கிறார்கள். ஆண்கள் வீட்டுக்காகவே உழைப்பதால் அவர்கள் எதுவும் வாங்குவதில்லை என கூறப்படுகிறது.
அதுவும் குறிப்பாக டிஜிட்டல் மயமான பிறகு, பெரும்பாலான மக்கள் கடைகளுக்குச் சென்று வாங்கும் பழக்கத்தை விட்டு விட்டனர். அனைவரும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதே விரும்புகின்றனர்.
ஆன்லைன் வர்த்தக நிறுவமான அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மையம் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது. இதில், ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வதில் பெண்களை விட ஆண்களே அதிக ஆர்வம் காட்டி வருவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து ‘இந்தியப் பார்வை’ என்ற பெயரில் ஐஐஎம்ஏ வின் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மையம் (CDT) ஆய்வு நடத்தி நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்த ஆய்வு இந்தியாவில் உள்ள 25 மாநிலங்களில் ஆன்லைன் மூலம் கணக்கெடுக்கப்பட்டது. இதில், 35,000 க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக ஆண்கள் சராசரியாக ரூ.2,484 செலவழித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெண்கள் செலவழிக்கும் ரூ.1,830 விட 36 சதவிகிதம் அதிகமாகும். இந்த அறிக்கை, 47 சதவிகித ஆண்களும், 58 சதவிகித பெண்களும் ஃபேஷன் ஆடைகளை வாங்கியுள்ளனர். 23 சதவிகித ஆண்களும் 16 சதவிகித பெண்களும் மின்னணு சாதனங்களை வாங்கியுள்ளனர்.
டெல்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது, ஜெய்ப்பூர், லக்னோ, நாக்பூர், கொச்சி ஆகிய நகரங்கள் நுகர்வோர் ஃபேஷனுக்கு 63 சதவிகிதம் அதிகமாகவும், மின்னணு சாதனங்களுக்கு ஆன்லைனில் 21 சதவிகிதம் அதிகமாகவும் செலவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பெண்களை காட்டிலும் ஆண்களே அதிகமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்வதாக இந்த அறிக்கையில் ஐஐஎம்ஏ வின் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மையம் தெரிவித்துள்ளது.