செய்திகள்

காதல் பிரச்னையால் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சிறுமிகள் தப்பி ஓட்டம்: 2 பேர் பணியிடை நீக்கம்!

கல்கி டெஸ்க்

தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் கல்வியைத் தொடர முடியாத குழந்தைகள் சில பேர் காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார்பாளையம் அருகே தாத்திமேடு சாலபோகம் பகுதியில் செயல்பட்டுவரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, சிறு வயதில் திருமண வழக்கு மற்றும் காதல் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி வயது குறைந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்ட சிறுமிகள், குழந்தைகள் நல குழுமத்தின் மூலம் இந்த அரசு காப்பகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தக் காப்பகத்தில் காதல் பிரச்னையால் மீட்கப்பட்ட ஏழு சிறுமிகள், குழந்தைகள் நல குழுமத்தினால் சேர்க்கப்பட்டுள்ளனர். இரவு வழக்கம்போல் சிறுமிகள் அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் இரவுப் பணியில் இருந்த காப்பக பாதுகாவலரின் அறையை தாழிட்டு விட்டு ஆறு சிறுமிகள் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர். அதைத் தொடர்ந்து அந்தக் காப்பகத்தில் இருந்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சிவகாஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்து தப்பி ஓடிய ஆறு சிறுமிகளை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தப்பி ஓடிய முடிச்சூரைச் சேர்ந்த ஒரு சிறுமியும், கரசங்காலைச் சேர்ந்த ஒரு சிறுமியும் தங்களின் வீட்டுக்கு வந்துவிட்டதாக அவர்களின் பெற்றோர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்து, அந்த சிறுமிகளை போலீசிடம் ஒப்படைத்தனர். மற்ற நான்கு சிறுமிகளைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், சென்னை வியாசர்பாடி மற்றும் காஞ்சிபுரம் அடுத்த குண்டு குளம் பகுதிகளை சேர்ந்த இரண்டு சிறுமிகளை போலீசார் தேடிப் பிடித்து மீட்டனர். மற்ற இரண்டு சிறுமிகளைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து சிறுமிகள் தப்பி ஓடும் வகையில் அஜாக்கிரதையாக இருந்ததற்காக காப்பக உதவியாளர் தீனா தேவி, பாதுகாவலர் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT