Peter Higgs
Peter Higgs 
செய்திகள்

‘கடவுளின் துகள்’ – இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்!

பாரதி

‘கடவுளின் துகள்’ என்றழைக்கப்படும் மனித வரலாற்றின் முக்கிய கண்டுபிடிப்பான ‘போசான் துகளைக்’ கண்டுபிடித்த, நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் வயது மூப்பினால் காலமானார்.

கடவுளின் துகள்:

பிரிட்டனில் உள்ள எடின்பேரோ பல்கலைக்கழகத்தில்  பணியாற்றி வந்த பீட்டர் ஹிக்ஸ் ‘தி ஆர்ஜின் ஆஃப் மாஸ்’ என்ற ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். சுமார் 14 ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பேரண்டம் உருவாக காரணம் Big Bang theory (பெரு வெடிப்பு) என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று. அதாவது அதிகப்படியான அடர்த்தி மற்றும் வெப்பநிலை காரணமாக உலகம் எவ்வாறு விரிவடைந்தது என்பதை விளக்கும் கோட்பாடுதான் Big Bang theory.

இதனையடுத்து, இந்த பெரு வெடிப்பில் சிதறிய கூறுகள் பிரபஞ்சத்தின் வெவ்வேறு திசைகளில் காற்றை விட வேகமாக சிதறின. அவ்வாறு சிதறிய கூறுகளுக்கு முழுமை கிடையாது. அந்த நிறையற்ற கூறுகளை ஒரு Energy field தான் முழுமையாக்குகிறது என்று பீட்டர் தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடிருந்தார். மேலும் இப்படிதான் அனைத்தும் உருவாகி பிரபஞ்சம் விரிவானது என்று தனது ஆய்வில் விளக்கமளித்திருந்தார்.

இந்த ஆய்வுக்குப் பிறகு, சிதறிய துகள்களை Higgs Field என்றும், முழுமைப் படுத்தும் Energy field ஐ Higgs Bosons என்றும் விஞ்ஞானிகள் அழைத்தனர். இது ஒரு ஆய்வாக மட்டுமே இருந்ததே தவிர, இதற்கான சாட்சிகள் எதுவும் இல்லை. 1960 களில் முன்வைத்து இந்த ஆய்வு 2012ம் ஆண்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. பிரான்ஸ் – சுவட்சர்லாந்து எல்லையில் ஐரோப்பியா அணு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டது. பூமிக்கு அடியில் உள்ள 'லார்ஜ் ஹேட்ரான் கொலைடர்' (Large Hadron Collider) எனும் உலகின் மிகப்பெரிய மற்றும் உலகிலேயே மிகவும் அதிக திறன்மிக்க Particle Accelerator ஆகியவற்றின் மூலம்தான் இந்த 'கடவுளின் துகள்' ஆய்வு உறுதிசெய்யப்பட்டது.

முதலில் ‘ The Goddamn Particle’ என்றுதான் ஆய்வில் குறிப்பிடப்பட்டது. ஆனால் அதன்பின்னர் சில விஞ்ஞானிகள் இதனை ‘ The God Particle’, அதாவது கடவுளின் துகள் என்று மாற்றினர். ஏனெனில், Goddamn என்றால் வெறுப்பால் மற்றும் சலிப்பால் உண்டானப் பொருள் என்ற அர்த்தம் கொண்டது. ஆகையால்தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த ‘கடவுளின் துகள்’ என்ற ஆய்வினால் உலகப் புகழ்பெற்ற பீட்டர் ஹிக்ஸ் வயது மூப்பினால் அவரது இல்லத்திலேயே காலமானார். பீட்டர் ஹிக்ஸ் தனது 96 வயதில் அவரது வீட்டிலேயே காலமானார்.

அதிக அளவில் மக்களை ஈர்க்கும் உலகின் டாப் 10 மியூசியங்கள்!

iPad Mini: 2024 இறுதிக்குள் அறிமுகமாகும் ஆப்பிள் சாதனம்! 

கோயில் செல்லும்போது அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்!

ஏடிஎம் திருட்டு – பணத்தைப் பாதுகாக்க பத்து வழிகள்!

கொளுத்தும் வெயிலிலும் ஒரு நன்மை இருக்கிறது; எப்படி தெரியுமா?

SCROLL FOR NEXT