செய்திகள்

#Breaking உக்ரைன் கீவ் அருகே ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!

கல்கி டெஸ்க்

உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, தனது அமைச்சக அதிகாரிகளுடன் இன்று ஹெலிகாப்டரில் சென்றார். தலைநகர் கீவ் நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரி என்ற பகுதி அருகே வந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மழலையர் பள்ளி அருகே நிலைத் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது.

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் உள்துறை அமைச்சர் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 16 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது .

இந்த ஹெலிகாப்டர் பள்ளி ஒன்றின் அருகே விழுந்து நொறுங்கிய விபத்தில் இருந்த குழந்தைகளும் தீ விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி வருகிறது. இதில் மொத்தம் 18 பேர் பலியாகியிருக்கலாம் மேலும் சிலர் விபத்தில் சிக்கி கிடக்கலாம் என AFP செய்தி நிறுவனம் செய்திகள் வெளியிட்டு வருகிறது. இந்த ஹெலிகாப்டர் ஆபத்து காலத்தில் பயன் படுத்த கூடிய வகையான ஹெலிகாப்டர் என தெரிய வந்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறைஅமைச்சரோடு அதன் இணை அமைச்சரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில், உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, உள்துறை இணை அமைச்சர், அமைச்சக அதிகாரிகள், பள்ளி குழந்தைகள் இரண்டு பேர் என மொத்தம் 16 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு யார் தெரியுமா?

Neuroplasticity-இன் அற்புதமான செயல்பாடுகள் பற்றி தெரியுமா?

நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி காட்சி தரும் தமிழகத்தின் மாயாஜால பாலைவனம்!

இதயத்தை பலப்படுத்தும் அருகுலா கீரை!

வாழ்க்கையில் சாதிக்க ரஷ்ய விஞ்ஞானி கூறும் 8 வழிகள்!

SCROLL FOR NEXT