Union Minister Narayan Rane
Union Minister Narayan Rane 
செய்திகள்

மத்திய அமைச்சர் இல்லத்தை இடிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு!

கல்கி டெஸ்க்

 மும்பையில் சட்ட விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டதாகக் கூறி மத்திய அமைச்சர் நாராயண் ரானேயின் பங்களா மும்பையில் சட்ட விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டதாகக் கூறி, பங்களாவின் ஒரு பகுதியை இடிக்கும்படி, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா, மும்பையிலுள்ள  ஜுஹு பகுதியில், பா.ஜ.கா.,வைச் சேர்ந்த மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானேவின்  பங்களா உள்ளது. இதில் சட்டவிதிகளுக்கு புறம்பாக கூடுதலாக கட்டிய பகுதிகளை முறைப்படுத்தக் கோரி அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்ற அமர்வு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

 கடந்த ஜூனில், கட்டடத்தை முறைப்படுத்த மாநகராட்சி மறுத்தது; அதை உயர் நீதிமன்றமும் ஏற்றது.

மும்பையில் விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்ட அமைச்சரின் பங்களாவை முறைப்படுத்த அனுமதிக்க முடியாது. அப்படி செய்தால் சட்டவிரோத கட்டுமானங்கள் மும்பையில் பல இடங்களில் தொடரும். ஏற்கனவே சட்டவிரோதமாக கட்டியவர்களும் முறைப்படுத்தக் கோரி விண்ணப்பிப்பர்.எனவே அமைச்சரின் சட்டவிரோத கட்டுமானத்தை ஏற்க முடியாது.

அதனால், அந்த பங்களாவில், முறைப்படி அனுமதி பெறாமல் கட்டப்பட்ட பகுதிகளை இரண்டு வாரங்களுக்குள் இடித்து, அதுதொடர்பான அறிக்கையை அடுத்த ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

 -இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய அமைச்சர் ரானேவுக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்!

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து… 8 பேர் பலி!

தொலைதூரப் பயணங்கள் முடிவதில்லை… தொடரும்…!

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT