அண்ணாமலை
அண்ணாமலை  
செய்திகள்

இந்தியை திணிக்கவில்லை: அண்ணாமலை காட்டம்!

கல்கி டெஸ்க்

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பது சில மாநிலங்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. .

இந்த இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முதல் எதிர்ப்புக்குரலை பதிவு செய்தார். தமிழகத்தை தொடர்ந்து கேரளா, தெலுங்கானா என மற்ற மாநிலங்களும் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தது.

அண்ணாமலை

இந்நிலையில் அண்ணாமலை அவர்கள் தனது பேட்டியில் இது குறித்து தனது கருத்தினை பதிவுசெய்துள்ளார். இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. அதாவது 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை. இந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால், தமிழக பாஜக எதிர்க்கும்.

மேலும் காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது. காங்கிரஸ் இந்தி மொழியை திணித்த போது திமுக 10 ஆண்டுகள் கூட்டணியில் அமைதியாக தானே இருந்தது. மத்திய அரசு 3 மொழியை படிக்க வேண்டும் என சொல்லி வருகின்றது. இந்தி கற்பதில் தமிழகம் "சி" நிலையில் தான் உள்ளது என கட்டமாக தனது கருத்தினை வெளியிட்டார் அண்ணாமலை.

ஆண்டுவிழாவா! குடும்ப விழாவா! மகிழ்ச்சியில் மிதந்த மக்கள்!

ஸ்படிக மாலையால் கிடைத்த விஷ்ணு சஹஸ்ரநாமம்!

‘கத்புட்லி’ பொம்மலாட்டம் பற்றித் தெரிந்து கொள்ளுவோமா?

நல்ல சகுனம், கெட்ட சகுனம் எவை தெரியுமா?

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுகளை இப்படிச் சாப்பிட்டு பாருங்களேன்!

SCROLL FOR NEXT