Iran President Ibrahim Raisi 
செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி!

பாரதி

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் உசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட சில முக்கிய நபர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விப்பத்திற்குள்ளாகியது. இந்த விபத்தில் சிக்கிய அதிபர் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாவிற்கு அசர்பைஜான் சென்றார். அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் மற்றும் மூத்த அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகின.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து சுமார் 600 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஜோல்ஃபா என்ற நகரத்தின் அருகே விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் ஹெலிகாப்டர் தொடர்பை இழந்தது. இதனையடுத்து நாட்டு மக்கள் அனைவரும் உச்சக்கட்ட அச்சத்தில் இருந்தனர். ஈரானின் மூத்தத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அமைதியை காக்குமாறு மக்களிடம் வலியுறுத்தினார். நாட்டின் நிர்வாகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்."எல்லாம் வல்ல இறைவன், எங்கள் அன்பான அதிபரையும் அவரது தோழர்களையும் முழு ஆரோக்கியத்துடன் மீண்டும் தேசத்தின் கரங்களில் கொண்டு வந்து சேர்ப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார்.

“விபத்தில் ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்தது. அதில் பயணம் செய்த அனைத்துப் பயணிகளும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.” என்று ஈரான் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆகையால், தற்போது அந்தப் பகுதியில் செய்யப்பட்டு வரும் சோதனையில், ஹெலிகாப்டரில் பயணித்த அனைவருமே பலியாகினர் என்று தெரியவந்துள்ளது.

தற்போது இந்தச் சம்பவம், உலக மக்களின் கவனத்தை இஸ்ரேல் மீது திருப்பியுள்ளது. ஏனெனில், கடந்த சில மாதங்களாக காசா இஸ்ரேல் போர், ஈரான் இஸ்ரேல் போராக மாறியது. முன்னதாக ஈரான் மறைமுகமாக காசா ஆதரவுப்பெற்ற ஹமாஸ் அமைப்பினருக்கு உதவி செய்து வந்தது. அதன்பிறகு இஸ்ரேல் ஈரானின் தூதரகத்தைத் தாக்கியதால், பின்னர் ஈரான் வெளிப்படை தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே வலுவான போர் நடைபெற்று வந்தது. ஆகையால், தற்போது இந்தச் சம்பவத்திற்கு இஸ்ரேல் காரணமா? என்ற கேள்வி விமர்சகர்கள் மத்தியில் வலுவாக முன் வைக்கப்படுகிறது.

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT