Benjamin Netanyahu 
செய்திகள்

பணயக்கைதிகளை விடுவிக்கிறதா இஸ்ரேல்? முடிவுக்கு வருகிறதா போர்?

பாரதி

பல மாதங்களாக நடைபெற்றுவரும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தெரிகிறது. ஏனெனில், இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் இருக்கிறது. இந்த இரு அமைப்புகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளனர். ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

அதுமுதல், இஸ்ரேல் கொடூரமான பதில்தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா கூட போரை நிறுத்துமாறு கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டத்தால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

இதனையடுத்து சமீபத்தில், 8 லட்சம் பேர் ரஃபா பகுதியிலிருந்து போர் நடந்து முடிந்த பகுதிகளுக்குச் சென்றனர். போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

அந்தவகையில் தற்போது காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒத்துக் கொண்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்றைய தினம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் சுமார் இரண்டரை மணிநேரம் பிளின்கன் தனியாக சந்தித்துப் பேசினார்.

இன்று பிளிங்கன் எகிப்துக்குப் பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கே ஹமாஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தை வெற்றியில் முடிந்து, பணயக் கைதிகளை விடுவிக்க இடையூறு செய்யாமல் இருந்தால், போர் முடிவுக்கு வந்துவிடும்.

போர் முடிவுக்கு வந்தால், பொதுமக்கள் மீண்டும் நிம்மதியடைவர். ஆனால், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது கேள்விக்குறிதான்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT