Russia president Putin 
செய்திகள்

மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கும் உக்ரைனுக்கும் சம்பந்தம் உள்ளதா? – ரஷ்ய அதிபர் சந்தேகம்!

பாரதி

ரஷ்யாவில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற ஒரு இசை நிகழ்வில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் உக்ரைன் இருக்கலாம் என்று ரஷ்ய அதிபர் புதின் சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.

கடந்த மார்ச் 22ம் தேதி இரவுப்பொழுதில் ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் ஒரு ராக் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அடையாளம் தெரியாத 3 முதல் 5 நபர்கள் திடீரென்று துப்பாக்கிச் சூட்டில் ஈடுப்பட்டனர். அந்தத் தாக்குதலில் சுமார் 137 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் வெடி மருந்தும் பயன்படுத்தியதால் அந்த இடம் பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் சிலர் இன்னும் உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் உள்ளனர். ஆகையால் இன்னும் உயிரிழப்புகள் கூடவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக மாஸ்கோ மேயர் பேசியதாவது, குரோகஸ் சிட்டு மைதானத்தில் பயங்கரமான சம்பவம் நடந்திருக்கின்றது. அந்தத் தாக்குதலில் இறந்தவர்களுக்கு எனது அஞ்சலியையும், உயிரழந்தவர்களின் குடும்பத்தார்களுக்கு எனது ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் ரஷ்யா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இதனை ஒரு கொடுமையானக் குற்றம் என்று விமர்சித்திருக்கிறார். இதற்கு உலக நாடுகள் அனைவரும் கேள்விகள் எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ரஷ்ய அதிபர் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறார். ஏனெனில் ரஷ்யாவும் உக்ரைனும் பல மாதங்களாக போர் நடத்தி வருவதால் ரஷ்ய அதிபர் புதின் அந்த நாட்டின்மீதி சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

ஆனால் இந்தத் தாக்குதலுக்கும் உக்ரைனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். அமெரிக்கா இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தாலும், இதற்கு எந்த வகையிலும் உக்ரைன் காரணமாக இருக்காது என்றுத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் இதனை விளக்கிக் கூறியுள்ளார். அதாவது “தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் கூட உக்ரைன் வாசி கிடையாது. அதேபோல் அவர்களுக்கும் உக்ரைனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.” என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து யார் அந்தத் தாக்குதல்களை நடத்தியிருப்பார்கள் என்று விவாதங்கள் எழுந்த நிலையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள், தாங்கள் தான் நடத்தினோம் என்று அவர்களே முன்வந்தனர். இதனையடுத்து தாக்குதல் நடத்திய 4 பேரை ரஷ்யா கைது செய்து சிறையில் அடைத்தது.

20 ஆண்டுகளில் இதுபோன்ற தாக்குதலை ரஷ்யா சந்தித்ததே இல்லை. சமீபத்தில் ரஷ்ய அதிபர் இரண்டாவது முறையாக பதவி ஏற்றதையடுத்து இந்தத் தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்தத் தாக்குதல் இஸ்லாமிய போராளிகள் நடத்தியது என்று புதின் ஏற்றுக்கொண்டாலும் இதிலும் உக்ரைனுக்குத் தொடர்பு உள்ளது என்றே அவர் கணிக்கின்றார். ஆகையால் உலக விமர்சனவாதிகள் இனி போர் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்றே கருதுகின்றனர்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT