Diana 
செய்திகள்

மறுபிறவி எடுத்திருக்கிறாரா இங்கிலாந்து இளவரசி டயானா? உலகம் முழுவதும் பரவும் அதிர்ச்சி தகவல்!

பாரதி

பல வருடங்களுக்கு முன்பு கார் விபத்தில் இறந்துபோன இளவரசி டயனா மீண்டும் ஆஸ்திரேலியாவில் மறுபிறவி எடுத்திருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.

இளவரசி டயானா 1961ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தார். இங்கிலாந்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருந்துவந்த டயானா குடும்பத்திற்கு அந்நாட்டு இளவரசர் சார்லஸ் உடனான அறிமுகம் கிடைத்தது. சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்த சார்லஸ் மற்றும் டயானா, ஒருகட்டத்தில் காதலிக்க ஆரம்பித்தார்கள். மகாராணி இரண்டாம் எலிசெபத்திற்கு சொந்தமான பார்க் ஹவுஸில் டயானாவின் குடும்பம் வாடகைக்கு இருந்தது. இவர்கள் இருவரும் வெளியே தனியாக செல்வது, பத்திரிக்கையாளர்கள்மூலம் உலகம் முழுவதும் தெரிந்தது. அப்போதைய காலகட்டத்தில் இவர்கள் உலகின் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டனர். இதற்கிடையில் 1981ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மன்னர் சார்லஸ் மற்றும் டயானா ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது.  

1981ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி டயானாவிற்கும் மன்னர் சார்லஸிற்கும் திருமணம் செயிண்ட் பால் கதீட்ரல் தேவாலயத்தில் வைத்து நடந்தது.  அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன், இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்துக்கொண்டனர். 1997ம் ஆண்டு டயானா ஒரு கார் விபத்தில் சிக்கி இறந்தார்.

இந்தநிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் காம்பெல், ஒரு பிரபல சேனலில் தொகுப்பாளராக வேலைப் பார்த்து வருகிறார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இங்கிலாந்து இளவரசி டயானாதான் மறுபிறவி எடுத்து தனது மகனாக பிறந்திருக்கிறார் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து டேவிட் சொன்னதாவது, “1997ம் ஆண்டு டயானா இறந்த 18 வருடங்கள் கழித்து எனது மகன் பிறந்தான். நான் அவன் 2 வயதாக இருக்கும்போது டயானா போட்டோவை எதர்ச்சியாக காட்டினேன். அவன் அதில் இருப்பது நான்தான் என்று மழலை வார்த்தைகளில் சொன்னான். நாங்கள் அவன் வேடிக்கையாக பேசுகிறான் என்று சிரித்தோம். ஆனால், 4 வருடங்களிலேயே, அவர் டயானா பற்றிய வாழ்க்கை வரலாற்றை சொல்ல ஆரம்பித்துவிட்டான். எங்களுக்கு தெரியாத பல விஷயங்களையும் சொன்னான்.

அவன் அப்படி சொல்லும்போது நாங்கள் அப்படியே வாயடைத்துவிட்டோம். ஏனெனில், நாங்களே அவ்வளவு துல்லியமாக டயானா குடும்பத்தைப் பற்றி அறிந்ததில்லை. டயானாவின் மொத்த கதையையும் சொன்னான். டயானாவுக்கு ஜான் என்ற உடன்பிறந்த அண்ணன் இருந்தாராம். இந்த ஜான் பற்றியெல்லாம் நாங்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை. டயானா பிறக்கும் முன்பே ஜான் இறந்துவிட்டாராம். ஆகையால், அவரைப் பற்றிய தகவல் அவ்வளவாக வெளிவரவில்லையாம்.

இது உண்மையா என்று முதலில் உறுதிப்படுத்திக்கொண்டோம். பின்தான் தெரிந்தது, இது உண்மை என்று. பிறகு அவன் சொல்வதை கொஞ்சம் கொஞ்சமாக நம்ப ஆரம்பித்தோம். டயானாவின் மற்றொரு புகைப்படத்தையும் காண்பித்தோம். நான் ஒரு இளவரசியாக இருந்தேன். ஒருநாள் சைரன் ஒலித்தபடி வண்டிகள் வரிசையாக வந்தன. அப்போதுதான் நான் இனிமேல் இளவரசி இல்லை என்பதை உணர்ந்தேன் என்று பில்லி சொன்னான்."

என்று டேவிட் பகிர்ந்துக்கொண்டார்.

இப்போது சமூகவலைதளங்களில் உலக முழுவதும் இதுதான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதன் பின்னால் இருக்கும் உண்மைதான் என்ன?

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT