Israel War 
செய்திகள்

வெடித்து சிதறிய பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் அதிர்ந்தது லெபனான்!

ராஜமருதவேல்

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஈரான் கைக்கோர்த்து அடிமேல் அடிவாங்கிக் கொண்டிருக்கின்றன. அதுவும் இஸ்ரேலின் ஒவ்வொரு தாக்குதலும் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களில் கூட இத்தகைய காட்சிகள் வந்திருக்காது.

பொதுவாக செல்போன், வயர்லெஸ் போன்களில் குண்டு வைத்திருப்பதை திரைப்படங்களில் பார்த்து இருப்போம். அந்த குண்டு அதிகபட்சம் ஒரு நாளில் வெடித்து விடும். அதற்கு ரிமோட் கண்ட்ரோல் அல்லது போனின் ஏதாவது பட்டனை தொட்டால் வெடிக்கும் வகையில் இருக்கும். ஆனால், இஸ்ரேல் தொழில் நுட்பம் பல மாதங்கள் கழித்து வெடித்துள்ளது.

லெபனான் நாட்டில் ஹெஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் தங்களது செல்போன் மூலம் இஸ்ரேல் கண்காணிக்கும் என்பதால் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பேஜர் தயாரிப்புகளை உபயோகிக்க முடிவு செய்தனர். இந்த பேஜர்கள் மூலம் மெசேஜ் மட்டுமே அனுப்ப முடியும். அழைப்புகள் எல்லாம் செய்ய முடியாது. கடந்த வருடம் ஹெஸ்புல்லா அமைப்பு ஆயிரக்கணக்கான பேஜர்களை வாங்கி பயன்படுத்தியது.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று பேஜர்கள் ஒவ்வொன்றாக வெடிக்க ஆரம்பித்தன. இந்த பேஜர் வெடிப்பில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,800 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மேலும் இரண்டாவது நாளும் இந்த குண்டுவெடிப்புகள் தொடர்ந்தது. இதில் பேஜரை தாண்டி வாக்கி டாக்கி, சோலார் அமைப்புகள் எல்லாம் வெடித்து சிதற லெபனான் அதிர்ச்சியில் உறைந்து போனது. 

புதன்கிழமை வெடிப்புகளில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மேலும் 400 பேர் படுகாயமடைந்தனர். குறைந்தது 170 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெய்ரூட்டில் பல குண்டுவெடிப்புகள் ஒரே நேரத்தில் நடந்தன. பேஜர், வாக்கி டாக்கிகள், சோலார் பேட்டரிகள் எல்லாம் வெடித்தது. கார்களில் உள்ள வாக்கிடாக்கி வெடித்து கார்களும் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் போக்குவரத்தும் குழப்பமானது.

மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாமல் நடப்பதை புரிந்து கொள்ளவும் முடியாமல் தவித்தனர். செல்லும் இடம் எல்லாம் குண்டுவெடிப்பு தொடர்ந்தது. புதன்கிழமை நடந்த தாக்குதல்களில், பெய்ரூட்டில் மூன்று ஹெஸ்புல்லா உறுப்பினர்களின் இறுதிச்சடங்கில் பலரது பேஜர், வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியது.

நியூயார்க் டைம்ஸ் கூற்றுப்படி குறைந்த தொழில்நுட்ப வயர்லெஸ் சாதனங்களில் வெடிகுண்டு எவ்வாறு பயன்படுத்தப் பட்டிருக்கும் என்பது பற்றிய யூகங்கள் அதிகரித்துள்ளன. தைவானிய உற்பத்தியாளர் கோல்ட் அப்பல்லோவிடம் இருந்து ஆர்டர் செய்து ஹிஸ்புல்லாவிற்கு அனுப்பப்பட்ட பேஜர்களின் தொகுப்பிற்குள் இஸ்ரேல் சில கிராம்  வெடிபொருட்களை மறைத்து வைத்து ரிமோட் மூலம் அவை வெடிக்க வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

வேறொரு கூற்றின்படி வயர்லெஸ் சாதனங்களை ஹேக் செய்து அதை தொடர்ச்சியாக இயக்கி லித்தியம் அயர்ன் பேட்டரியை சூடாக்கி வெடிக்க வைத்துள்ளது என்றும் தகவல் வருகிறது.

கோல்ட் அப்பல்லோவின் நிறுவன தலைவர் HSU சிங்குவாங் செய்தியாளர்களிடம் கூறுகையில், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் ஒரு ஐரோப்பிய விநியோகஸ்தரால் தயாரிக்கப்பட்டவை. அவர்கள் எங்களின் பெயரை பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் செய்திருந்தனர். பொருட்களை நாங்கள் தயாரிக்கவில்லை என்றார்.

புதனன்று இஸ்ரேலிய வீரர்களிடம் பேசிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், "நாங்கள் போரில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். அதற்கு தைரியம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி தேவை." என்றார். செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மின்னணு சாதனங்களின் வெடிப்புகள் பற்றி அவர் குறிப்பிடவில்லை, ஆனால் இஸ்ரேலின் இராணுவம் மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளின் வேலையைப் பாராட்டினார், "முடிவுகள் மிகவும் ஈர்க்கக்கூடியவை" என்று  சந்த்தேகப்படும் படி கூறினார்.

இந்த குண்டு வெடிப்புகள் மத்திய கிழக்கு பிரதேசத்தில் போர் பதற்றத்தினை மேலும் அதிகரித்துள்ளது.

சீன நாட்டின் ஜனாதிபதிக்கு பரிசாக கொடுக்கப்பட்ட 108 முகங்கள் கொண்ட குத்துவிளக்கு எங்கு செய்யப்பட்டது தெரியுமா?

கங்கை நதியை சுத்தம் செய்யும் புண்ணியம் கிடைக்கணுமா? பிரதமர் மோடியின் ஏலத்தில் கலந்து கொள்ளுங்க மக்களே!

பாமாயிலில் தயாராகும் இனிப்புகளில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் தெரியுமா?

இரத்தத்திலுள்ள அசுத்தங்களை நீக்க உதவும் 9 வகை உணவுகள்!

ஆந்திரா ஸ்பெஷல் கத்தரிக்காய் ரசம் செய்யத் தெரியுமா? 

SCROLL FOR NEXT