செய்திகள்

ஜெயலலிதாவின் அண்ணன் பேத்திக்கு பெயர் சூட்டு விழா - பெயர் என்னவென்று தெரியுமா?

ஜெ. ராம்கி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அ.தி.மு.க அணிகளுக்கிடையே மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஒரு பெயர் சூட்டு விழாவும் அரசியலில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ. தீபாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா பெரிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

சென்ற வாரம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜெ.தீபாவின் ஆதரவு பன்னீர் செல்வத்திற்கு உறுதிப்படுத்தியாக வந்த செய்திகள் வெளியாகின.

கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சென்று சந்தித்த பின்னர், தங்கள் மகளின் பெயர் சூட்டு விழாவிற்கு நேரில் அழைப்பு விடுத்ததாக விளக்கம் தரப்பட்டது.

நேற்று சென்னை தி.நகரில் நடைபெற்ற விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினரும், பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்டனர். அ.தி.மு.கவை பொறுத்தவரை ஒ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் நிறைய பேர் கலந்து கொண்டார்கள்.

ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் கலந்து கொண்டு குழந்தைக்கு தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்தினார். எடப்பாடி தரப்பிலிருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் பெண் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்பட்டிருக்கலாம் என்று இணையத்தில் சுவராசிய விவாதங்கள் நடைபெற்று வந்தன. ஜெயலலிதா, சந்தியா, கோமளவல்லி என்றெல்லாம் நெட்டிஸன்கள் ஏகப்பட்ட ஆப்ஷனை குறிப்பிட்டிருந்தார்கள்.

இவற்றில் எதுவும் உண்மை இல்லையாம். ஜெ. தீபா தன்னுடைய மகளுக்கு கார்த்திகா என்று பெயரிட்டிருக்கிறார்.

சூரியனையே சீண்டிப்பார்த்த நம் விஞ்ஞானிகள்!

கோபப்படும் கணவரை மிஸ்டர் கூலாக மாற்றும் தந்திரம்!

ஒருவரின் தொழில் வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் எவ்வாறு உதவுகின்றன?

யார் இந்த ஆரோக்கிய ராஜீவ்? தடகளத்தில் இவரின் சாதனைகள் என்னென்ன?

அதிகமாக மீன்பிடிப்பதால் இவ்வளவு பாதிப்புகளா? 

SCROLL FOR NEXT